கிடுகிடுவென இறங்கிய தங்கம் விலை... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 குறைவு!
தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை இன்று (அக். 22) குறைந்துள்ளது. 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.169 குறைந்துள்ள நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.155 சரிந்துள்ளது.
இதன்படி, இன்று 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,438-க்கும், 8 கிராம் ரூ.1,15,504-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,235-க்கும், 8 கிராம் ரூ.1,05,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (அக். 21) 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,607-க்கும், 8 கிராம் ரூ.1,16,856-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று இதன் விலை 8 கிராமுக்கு ரூ.1,352 குறைந்துள்ளது.
அதேபோல், நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,390-க்கும், 8 கிராம் ரூ.1,07,120-க்கும் விற்பனையானது. இன்று 8 கிராமுக்கு ரூ.1,240 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகை வாங்கத் திட்டமிடுவோர் இன்றைய விலை நிலவரத்தைக் கவனித்து வருகின்றனர்.
What's Your Reaction?

