நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உள்பட ஏராளமனோர் தவெகவில் இணைந்தனர்.

எம்ஜிஆர் அமைச்சரவையில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், கம்பம் எம்எல்ஏ ஜெகன்நாத் மிஸ்ரா, நடிகர் மன்சூர் அலிகான் மேனகா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.

நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உள்பட ஏராளமனோர் தவெகவில் இணைந்தனர்.
mansoor ali khan rv udhayakumar join tvk

சில காலமாகவே அரசியல் வட்டாரத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்த பிறகு கட்சித்தாவல் அதிகமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது .குறிப்பாக அதிமுகவிலிருந்து மாஜி அமைச்சர்கள் தவெகவில் இணைந்திருப்பது எடப்பாடி பழனிச்சாமி மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இணைப்பு விழாவிற்காக 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர் மதியம் 12 மணியளவில் மாற்றுக்கட்சியினர் தவெக அலுவலகத்திற்குள் முட்டி மோதி உள்ளே சென்றனர்.

இதனையடுத்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் பலரும் அக்கட்சியில் இணைந்தனர். அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியின் சகோதரி மகளும் தொழிலதிபருமான மேனகாவும் தவெகவில் இணைந்தது குறிப்பிட தக்க ஒன்றாகும். மேலும் அதிமுகவில் மூன்று முறை வலங்கைமான் தொகுதி எம்எல்ஏவாகவும், ஒரு முறை அமைச்சராகவும் பதவி வகித்த மூத்த தலைவர் கோமதி சீனிவாசன், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார்.

திருவையாறு அதிமுக முன்னாள் எம்எல்ஏ எம்ஜிஎம் சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் கலைப்பிரிவு செயலாளர் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலர் தவெகவில் இணைந்தனர்.
இவர்களை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகானும் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow