ராசிபலன்: 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்கள்...!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் வேலை, தொழில், குடும்பம், பணவரவு, ஆரோக்கியம் மற்றும் பரிகார பலன்கள் எப்படி இருக்கும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளுங்கள்.

Aug 2, 2026 - 07:00
Aug 1, 2026 - 16:10
ராசிபலன்: 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்கள்...!

மேஷம்:

முயற்சிகள் பலன்தரும் காலகட்டம்க. அலுவலகத்துல திட்டமிடலும் நேரம்தவறாமையும் அவசியம்க. உடனிருக்கும் யாரிடமும் வீண் புலம்பல் வேண்டாம்க. கோப்புகளைக் கையாளும்போது முழு கவனத்தோட இருங்க. வீட்டுல விசேஷங்கள் படிப்படியா வரும்க. ஆடை, ஆபரணம் சேரும்க. வாழ்க்கைத் துணை வார்த்தைகளுக்கு மதிப்பு குடுங்க. குடும்பத்து மூத்தவங்க உடல்நலத்துல கவனம் செலுத்துங்க. வரவை முறைப்படுத்தி செலவிடுங்க. வாரிசுகளால் பெருமை ஏற்படும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க பொறுமையா இருக்கணும்க. வர்த்தகத்துல வளர்ச்சி நிலை உருவாகும்க. பெரும் முதலீடுகளை தவிருங்க. தொலைதூரப் பயணங்களை பகல்ல மேற்கொள்ளுங்க. அலர்ஜி, சுவாச உபாதைகள் வரலாம்க. வேழமுகனை வணங்குங்க. வாழ்க்கை வெளிச்சமாகும்.

ரிஷபம்:

நன்மைகள் அதிகரிக்கும் காலகட்டம்க. பணியிடத்துல உங்க திறமைகள் பாராட்டப் படும்க. எதிர்பார்த்த இடமாற்றம், உயர்வுகள் கைகூடும்க. உயரதிகாரிகளிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம்க. பொறுப்புகளை திட்டமிட்டு செயல்படுத்துங்க. குடும்பத்துல குதூகலம் இடம்பிடிக்கும்க. பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும்க. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமா வைச்சுக்குங்க. பூர்வீக சொத்து லாபம் தரும்க. செய்யும் தொழில்ல கவனம் முக்கியம்க. அயல்நாட்டு ஒப்பந்தத்துல விதிமீறல் கூடாதுங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு கூடும்க. சிலர் மேலிடத்தின் பாராட்டும் பரிசும் பெறலாம்க. இரவுப் பயணத்துல இடை வழியில இறங்க வேண்டாம்க. ஒற்றைத் தலைவலி, கழிவுறுப்பு உபாதைகள்ல கவனமா இருக்கணும்க. பெருமாள், தாயாரை வணங்குங்க. பெருமைகள் சேரும்.

மிதுனம்:

தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம்க. அதேசமயம் வேண்டாத சோம்பலும் வீணான கோபமும் தவிர்க்கணும்க. அலுவலகத்துல சாதகமான சூழல் நிலவும்க. மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும்க. பதவி, ஊதியம் உயரும்க. குடும்பத்துல இனிமை அதிகரிக்கும்க. வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும்க. பணவரவு சீராகும்க. பழைய கடன்கள் பைசலாகும். உறவுகளிடையே செல்வாக்கு உயரும்க. வார்த்தைகள்ல கனிவு இருந்தால் மட்டுமே நல்லவை தொடரும்க. செய்யும் தொழில் எதுவானாலும் நேரடி கவனம் செலுத்துங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்குப் பெருமை நிலைக்கும்க. வாகனப் பயணத்துல கவனச் சிதறல் கூடாதுங்க. கண்கள், மூட்டு, நரம்பு, பல் உபாதைகள் வரலாம்க. இஷ்ட அம்மனைக் கும்பிடுங்க. எண்ணங்கள் ஈடேறும்.

கடகம்:

திட்டமிட்டு செயல்பட்டால் செல்வாக்கு உயரும் காலகட்டம்க. பணியிடத்துல யாரிடமும் வீண் வாதம் வேண்டாம்க. மேலதிகாரிகளுடன் பேசும்போது வார்த்தைகள்ல கவனமா இருங்க. விளையாட்டாகவும் யாரையும் கேலி, கிண்டல் செய்ய வேண்டாம்க. வீட்டுல நிம்மதியான சூழல் நிலவும்க. உறவுகளுடன் வாக்குவாதம் தவிருங்க. ஆபரணங்களில் ஆடம்பரம் வேண்டாம்க. வரவை முறையாக சேமியுங்க. இளம் வயதினர் சுபகாரியங்கள்ல அவசரப்பட வேண்டாம்க. செய்யும் தொழிலில் நிதானம் அவசியம்க. அரசு, அரசியல் துறையினருக்கு பெருமை அதிகரிக்கும்க. புறம் பேசும் நபர்களை தாமதமில்லாம விலக்குங்க. வாகனப்பழுதை உடனே சீர்செய்யுங்க. ரத்த அழுத்தம், சர்க்கரை உபாதைகளை உடனே கவனியுங்க. ஆறுமுகனை ஆராதியுங்க. ஆனந்தம் சேரும்.

சிம்மம்:

பொறுமைக்குப் பரிசாக பெருமை பெறும் காலகட்டம்க. பணியிடப் பொறுப்புகள்ல முறையான திட்டமிடல் முக்கியம்க. எந்த சமயத்திலும் அவசரமும் அலட்சியமும் கூடாதுங்க. உடனிருப்போர் விஷயங்கள்ல மூக்கை நுழைக்காதீங்க. குடும்பத்துல மூன்றாம் நபர் தலையீட்டைத் தவிருங்க. வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு கூடாதுங்க. பூர்வீக சொத்துல விட்டுக்கொடுத்துப் போங்க. ஆடை, ஆபரணம் சேரும்க. தரல், பெறலை உடனே குறிச்சு வையுங்க. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமா வைச்சுக்குங்க. செய்யும் தொழில்ல சோம்பலில்லா முயற்சிகளைச் செய்யறது அவசியம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க அமைதியாகச் செயல்படணும்க. தேவையற்ற பயணங்களைத் தவிருங்க. நரம்பு, மூட்டுகள், எலும்பு உபாதைகள் வரலாம்க. சிவனை வணங்குங்க, வாழ்க்கை சீராகும்.

கன்னி:

உயர்வுகள் வரக்கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல உங்க செல்வாக்கு அதிகரிக்கும்க. உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும்க. பலநாள் கனவுகள் நனவாகும்க. இந்த சமயத்துல வீண் ஜம்பமும் வெட்டி வாதமும் வேண்டாம்க. இல்லத்துல சந்தோஷம் மலரும்க. அசையும் அசையா சொத்துசேரும்க. விலகி இருந்த உறவுகள் வந்து சேரும்க. குடும்பத்துல மூத்தவங்க வார்த்தைகளுக்கு மதிப்பு குடுங்க. பணவரவுல இருந்த தடைகள் நீங்கும்க. வர்த்தக முதலீடுகளை குடும்பத்தினர் ஆலோசனை கேட்டு செய்யுங்க. பங்குவர்த்தகம் தவிருங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு பொறுப்புகள் உயரும்க. பயணப்பாதையில வேகம் வேண்டாம்க. தூக்கமின்மை, அஜீரண உபாதைகள் வரலாம்க. துர்க்கையைக் கும்பிடுங்க. வாழ்க்கை துளிர்க்கும்.

துலாம்:

தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் காலகட்டம்க. பணியிடத்துல உங்க பெருமை உரியவர்களால் உணரப்படும்க. அதேசமயம் பொறுப்புகளும் அதிகரிக்க வாய்ப்பு உண்டுங்க. புலம்பாமல் ஏற்று திட்டமிட்டு செயல்பட்டா, உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும்க. எதிர்பாராத இடமாற்றம் வந்தா ஏற்றுக்குங்க. இல்லத்துல விசேஷங்கள் வரத்தொடங்கும்க. உறவுகளுடன் இருந்த பலநாள் பிரிவுகள் மாறும்க. பணவரவில் இருந்த தடைகள் நீங்கும்க. பழைய கடன்கள் பைசல் ஆகும்க. வர்த்தகத்துல நேரடி கவனம் அவசியம்க. கூட்டுத் தொழில்ல மாற்றம் வரலாம்க. அரசு, அரசியல் துறையினர் உழைப்புக்கு ஏற்ற உயர்வைப் பெறலாம்க. தொலைதூரப் பயணத்துல போதுமான ஓய்வு முக்கியம்க. அடிவயிறு, பாதம், அஜீரணம் வரலாம்க. பைரவரைக் கும்பிடுங்க. வாழ்க்கை பசுமையாகும்.

விருச்சிகம்:

எண்ணங்கள் ஈடேறும் காலகட்டம்க. பணியிடத்துல திறமைகள் பாராட்டப்படும்க. உடனிருப்போர் ஆதரவு கிட்டும்க. பிறர் தவறுக்கு நீங்க பழி ஏற்றிருந்த நிலை மாறும்க. சிலர் முதன் முறையாக அயல்நாடு செல்ல வாய்ப்பு உண்டுங்க. வீட்டுல விசேஷங்கள் வரத்தொடங்கும்க. புதிய உறவும் அதனால் ஆதாயமும் ஏற்படும்க. பெற்றோர், பெரியோர் ஆசி கிட்டும்க. ஆடை, ஆபரணம், பொருள் சேரும்க. வீடு, வாகனம் புதுப்பிக்க, மாற்ற நேரிடலாம்க. வர்த்தகத்துல வளர்ச்சி ஏற்படும்க. அரசு, அரசியல் துறையினருக்கு ஆதரவு அதிகரிக்கும்க. மேலிடத்தின் பாராட்டு கிட்டும்க. வாகனத்தை ஓட்டும்போது கவனச் சிதறல் கூடாதுங்க. நரம்பு, முதுகுதண்டுவட உபாதைகள் வரலாம்க. இஷ்ட மகானைக் கும்பிடுங்க.வாழ்க்கை மணக்கும்.

தனுசு:

பொறுப்பு உணர்வுடன் செயல் படவேண்டிய காலகட்டம்க. அலுவலகத்துல படபடப்பும் பதட்டமும் கூடாதுங்க. பிறரை நம்பி உங்க பணியை ஒப்படைக்க வேண்டாம்க. உடனிருப்போர் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் குடுங்க. இடமாற்றம் வந்தா மறுக்காம ஏற்றுக்குங்க. வீட்டுல மகிழ்ச்சி நிறையும்க. சந்தேகமும், சஞ்சலமும் தவிர்த்தா நிம்மதி நிலைக்கும்க. சகோதர உறவுகளிடம் விட்டுக் கொடுத்துப் போங்க. வீடு, வாகனம் தொடர்பான தஸ்தாவேஜுகளை பத்திரமா வைச்சுக்குங்க. பெண்கள், சமையலறையில எச்சரிக்கையா இருங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க வாக்குகள்ல கவனமா இருங்க. செய்யும் தொழில்ல சீரான லாபம் கிட்டும்க. பயணத்துல லாகிரிக்கு இடம் தராதீங்க. தூக்கமின்மை, ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம் வரலாம்க. சிவன் பார்வதியை வணங்குங்க. வாழ்க்கை சிறக்கும்.

மகரம்: 

விட்டுக்கொடுத்துப் போனால் விசேஷங்கள் வரக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல எதிரிகளால் ஏற்பட்டிருந்த வீண் பழிகள் நீங்கும்க. உயரதிகாரிகளிடம் ஆதரவு அதிகரிக்கும்க. உடனிருக்கும் யாரிடமும் வீண் அதிகாரம் வேண்டாம்க. கர்வம் மட்டும் தவிர்த்தா, சர்வமும் ஏற்றமாகும்க. குடும்பத்துல சந்தோஷம் அதிகரிக்கும்க. அது நிலைக்கணும்னா, குதர்க்கம் தவிர்க்கணும்க. குழந்தைகளால் பெருமை ஏற்படும்க. அசையும், அசையா சொத்து சேரும்க. வீடு, வாகனம் புதுப்பிக்க நேரும்க. அரசு, அரசியல்ல உள்ளவங்களுக்கு ஆதரவு நிலைக்கும்க. மேலிடத்தை கனவிலும் குறை சொல்ல வேண்டாம்க. செய்யும் தொழில்ல முயற்சிகள் முக்கியம்க. வாகனத்தை செலுத்தும்போது கனவுல மிதக்க வேண்டாம்க. அடிவயிறு, பாதம், நரம்பு உபாதைகள் வரலாம்க. ரங்கநாதரைக் கும்பிடுங்க. வாழ்க்கை ரம்யமாகும்.

கும்பம்:

பொறுப்பு உணர்வுடன்  செயல்படவேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல வீணான சலிப்பும் வேண்டாத கோபமும் கூடாதுங்க. பொறுப்புகள் எதையும் நேரடியாக கவனிக்கறது நல்லதுங்க. பிறரைக் குறை சொல்வது உங்களுக்கே எதிராகிடலாம்க, தவிருங்க. வாழ்க்கை இனிக்கணும்னா, வார்த்தைகள்ல இனிமை அவசியம்க. குடும்ப உறுப்பினர்கள் யாரிடமும் குதர்க்கம் வேண்டாம்க. சுபகாரியங்கள்ல வீண் ஆடம்பரம் தவிருங்க. குழந்தைகள் ஆரோக்யத்துல அக்கறை செலுத்துங்க. வரவை சேமிக்கப் பழகுங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க அடக்கமாக செயல்படணும்க. செய்யும் தொழில்ல சீரான வளர்ச்சி ஏற்படும்க. வர்த்தகத்துல குறுக்குவழி வேண்டாம்க. வாகனத்துல சிறு பழுதையும் உடனே சரிசெய்யுங்க. முகம், கழுத்து, வயிறு உபாதைகள் வரலாம்க. தட்சிணாமூர்த்தியைக் கும்பிடுங்க. வாழ்க்கை தழைக்கும்.

மீனம்:

கவனமாகச் செயல்பட்டா, கஷ்டங்கள் நீங்கக் கூடிய காலகட்டம்க. பணியிடத்துல உங்க வார்த்தையின் மதிப்பு கூடும்க. மேலதிகாரிகளால் உங்க திறமை உணரப்படும்க. அதேசமயம், யாரையும் பழிவாங்கும் உணர்வு வேண்டாம்க. பொறுப்புகளை நேரடி கவனத்துடன் செய்யுங்க. வீட்டுல நிம்மதி நிலவும்க. பழைய பகையை மறந்துடறதுதான் நல்லதுங்க. பிள்ளைகளால் பெருமை சேரும்க. பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பு குடுங்க. வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் கூடும்க. செய்யும் தொழில் செழிக்கும்க. சட்டப்புறம்பு எட்டிப்பார்த்துடாம கவனமா இருங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும்க. முகஸ்துதி நபர்களை உடனே விலக்குங்க. வாகனப் பயணத்துல வேகம் வேண்டாம்க. பற்கள், அலர்ஜி, சுவாச உபாதைகள் வரலாம்க. நரசிம்மரை வணங்குங்க. நன்மைகள் தொடரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow