ரிஷப ராசிக்கான சனி வக்ர பலன்கள்! - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

ரிஷபம் ராசிக்கான சனி வக்ர பலன்களை(15.7.2026-30.11.2026]  கூறுகிறார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ..

Jul 6, 2026 - 15:30
Jul 6, 2026 - 15:25
ரிஷப ராசிக்கான சனி வக்ர பலன்கள்! - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

ரிஷப ராசிக்கான பலன்கள்:

உங்க ராசிக்குப் பதினோராம் இடமான லாபஸ்தானத்துல சனி வக்ரம் அடையறார்ங்க. இந்த அமைப்புனால், உங்களுக்கு லாபத் அதே சமயம், தோண்டாத பூதமாக கூடாநட்பும் தேடி வரலாம். கவனமாக இருந்து விலக்குவதும். உழைப்பில் சோம்பலை உதறுவதும் முக்கியம்க

ரிஷபம் நின்குஅளவு அதி

அலுவலகத்துல உங்க மனம்போல ஏற்றமும் மாற்றமும் வரும்க பொறுப்புகள் எதுவானாலும் நிதானமும் திட்டமிடலும் முக்கியம்க உங்க திறமையை மேலதிகாரி கள் பாராட்டும்போது சந்தோஷப்படறது. தப்பிள்லீங்க ஆனா அதுவே கர்வமாக மாறிடாம இருக்கறது அவசியம்க. உடனிருப்போர் குறைகளை பெரிதுபடுத்திப் போவேண்டாம்சு

வீட்டுல நிம்மதி, சந்தோஷம் நிலைக்கும்க தடைபட்டுப் போன விசேஷங்கள் படிப்படியா வர ஆரம்பிக்கும்க கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக் கசப்பு மறையும்க வாரிசுகள் ஆரோக்கியம் சீராகும்க சகோதர உறவுகளோடு இருந்த சச்சரவு தீரும்க வரவு சீராகும்க பழைய கடன்களை முறையாக பைசல் செய்துடறதும் புதிய கடன்களைத் தவிர்க்கறதும் அவசியம்க

செய்யும் தொழில்ல லாபம் தொடர்ச்சியா அதிகரிக்கும்க. கூட்டுத் தொழில்ல புதிய ஒப்பந்தங்களால லாபம் வரும்சு. வெளிநாட்டு வர்த்தகத்துல பெரும் முதலீடுகளை உரியமுறையில் கலந்தாலோசித்த பிறகு செய்யணும்க. அரசுவழி அனுமதி வங்கிக்கடன்கள் எதிர் பார்த்தபடியே கிட்டும்க

அரசு. அரசியல் துறையினருக்கு வாக்குல இனியையும் செயல்கள்ல நிதானமும் இருந்தா பெருமைகள் நிலைக்கும்க. மேலிடத்துக்கு எதிரானவங்க நட்பு கனவுல கூட வராம இருக்கறது நல்லதுங்க வரக்கூடிய நல்ல வாய்ப்புகளை வறட்டு கௌரவத்தால விரட்டிடாம இருக்கறது அவசியம்

பெண்களுக்கு நற்செய்திகளால் மகிழ்ச்சி நிறையக்கூடிய நேரம்க மணப்பேறும் மாப்பேறும் தடைகள் நீங்கிக் கைகூடி வரும்க ஆடை, ஆபரணப் பொருள் சேரும்க விலை உயர்ந்த நகைகளை அணிந்துகொண்டு போகும்போது தக்க துணை இல்லாம போகவேண்டாம்க. சுபகாரியங்கள் நடக்கும் போது வாக்குல இனிமை மிகமிக முக்கியம்க எதிர்பாலரிடம் எச்சரிக்கையா பழகுங்க

சுலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வரும்க. சிறு வாய்ப்பையும் அலட்சியமில்லாம செய்தா. ஏற்றமும் மாற்றமும் ஏற்படும்க. மாணவர்கள் மளம்போல மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும்க பெற்றோர், பெரியோர் வழிகாட்டலை அவசியம் கேளுங்க

அலுவலகம் சம்பந்தப்பட்ட பயணங் கள்ல கோப்புகள் பத்திரம்க குலதெய்வத் தைக் கும்பிடப்போகும்போது கேளிக்கை கொண்டாட்டம் தவிர்க்கணும்க

உடல்நலத்துல அலட்சியம் கூடாதுங்க. அலர்ஜி. நரம்பு, ரத்த அழுத்த மாறுபாடு * சுவாசப் பிரச்னை உபாதைகள் வரலாம்க வழுக்கலான இடங்கள்ல கவனமா இருங்க

வெள்ளிக்கிழமைகள்ல மகாலக்ஷ்மியைக் கும்பிடுங்க. முடிஞ்சா ஒருமுறை திருப்பதி சென்று அலர்மேல்மங்கை தாயாரை வணங்கிட்டு பெருமாளை தரிசனம் செய்துட்டு வாங்க. வாழ்க்கை மலரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow