மிதுனம் ராசிக்கான சனி வக்ர பலன்கள்! - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மிதுனம் ராசிக்கான சனி வக்ர பலன்களை(15.7.2026-30.11.2026]  கூறுகிறார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ..

Jul 6, 2026 - 16:00
மிதுனம் ராசிக்கான சனி வக்ர பலன்கள்! - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

நவகிரஹங்களில் எல்லோராலும் அச்சத்துடனும் பக்தியுடனும் பார்க்கப்படும் கிரஹம் சனி மட்டுமே. அதற்குக் காரணம், சனைசரன், சனிபகவான் என்றெல்லாம் போற்றப்படும் சனி கிரஹம் மட்டுமே, ஒருவரது வாழ்க்கையில் அத்தனைவிதமான பாடங்களையும் கற்றுத் தரக்கூடியது என்பதுதான்.

நீதிமான், தர்மத்தின் காவலன் என்றெல்லாம் போற்றப்படும் சனிபகவான் பொதுவாக ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் இருப்பார். இந்த அளவுக்கு நீண்டகாலம் இருக்கக் கூடிய கிரஹமும் இவர் மட்டுமே. இந்த வகையில் முந்தைய ராசி, பிந்தைய ராசிகளில் இருக்கும் காலகட்டங்களையும் சேர்த்து ஏழரை ஆண்டுகள் ஒவ்வொரு ராசியினருக்கும் இவர் பலாபலன்களைத் தருவார்.

அதேசமயம் சனிபகவான் ஒரு ராசியில் இருந்தாலும் வக்ரகதியாகும் சமயத்தில் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ அங்கே இருந்து முன்னாக நகர்ந்து, முந்தைய நட்சத்திரத்தில் வக்ரம் பெறுவார். அந்த சமயத்தில் அதுவரை அவர் அளித்துவந்த பலாபலன்களில் சில மாற்றங்களைத் தருவார்.

உதாரணமாக விரய ஸ்தானத்தில் இருப்பவர் என்றால், அதனை மேலும் அதிகப்படுத்துவார். இது எதிர்மறையாகத் தோன்றினாலும் விரயத்துக்கு ஏற்ற வகையில் வரவும் இருக்க வேண்டும் என்பதால், வரவும் அதிகரிக்கும். அதேசமயம் செலவுகளில் திட்டமிடல் இருந்தால், விரயம் சுபசெலவாதிசழிப்பாக நிலைக்கும்.

இது உதாரணம் மட்டுமே. இதுபோல ஒவ்வொரு ராசிக்கும் அவரது வக்ரகாலத்தில் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும். நன்மைகள் அதிகரிக்கவும், பாதிப்புகள் இருப்பின் அவற்றின் வீரியத்தைக் குறைக்கவும் எந்த மாதிரியான பரிகாரங்களைச் செய்வது நல்லது? போன்றவையெல்லாம் இந்தப் பலன்களின் சொல்லப்பட்டிருக்கின்றன.

சனிபகவான், இந்தப் பராபவ ஆண்டில் ஆனிமாதம் 31 ஆம் தேதி, (15.7.2026) அன்று வாக்கியப்பஞ்சாங்கத்தின்படி, உத்திரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் மீனம் ராசியில் வக்ரகதியாகிறார். இவர் மீண்டும் கார்த்திகை மாதம் 14 ஆம் தேதி,(30.11.2026) அன்று உத்திரட்டாதி நட்சத்திரம் 1 ஆம் பாதம் மீனம் ராசியில் வக்ரகதியாகிறார்.

சனிபகவான் வக்ரகதியாகி இருக்கக் வக்ரகதியாகி இருக்கக் கூடிய இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும், எந்த தெய்வத்தை வணங்குவது சிறப்பு என்பதையெல்லாம் முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

எளிய பரிகாரமாக அந்தந்த தெய்வத்தைக் கும்பிடுங்கள். இயன்றால், உரிய பரிகாரக் கோயிலுக்குச் சென்று வாருங்கள். அல்லது, அவரவர் இல்லத்தின் அருகே உள்ள கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள்.

சகல தெய்வங்களின் ஆசியாலும், சனிபகவானின் அனுகிரஹத்தினாலும் உங்கள் வாழ்வில் எல்லா நன்மைகளும் சேரும். நாள் எல்லாம் திருநாளாகும்.

 மிதுன ராசி பலன்கள்:

மிதுனம் சனிபகவான். உங்க ராசிக்குப் பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்துல வக்ரமடையறார்ங்க. இந்த அமைப்பு உங்களுடைய பணி, தொழில்ல முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்குதுங்க அதேசமயம், முழுமையான முயற்சியும் பொறுப்பு உணர்வும் இருந்தா. நன்மைகள் தொடர்ச்சியாகும்க.

அலுவலகத்துல அனுகூலக் காற்று வீசத்தொடங்கும்க அதேசமயம் எல்லாம் தெரியும்னு நினைக்கிறதும் ஏனோதானோன்னு செயல்படறதும் கூடவே கூடாதுங்க. பொறுப்புகளை திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செய்து முடிக்கறது அவசியம்க புறம் பேகம் நபர்களைப் புறம்தள்ளி வைக்கணும்க முயற்சிகள் முழுமையா இருந்தா எதிர்பார்த்த பதளி, ஊதிய உயர்வுகள், இடமாற்றம் இப்படி எல்லாமே உங்க எண்ணம்போல கிடைக்கும்க பணியிடத்துல வீண் கேளிக்கை தவிருங்க

குடும்பத்துல நிம்மதி நிலவத் தொடங்குக தம்பதியர் இடையே இணக்கம் உருவாகும்க. குடும்பத்துப் பெரியவங்க உடல் நலத்துல அக்கறை அவசியம்க குலதெய்வத்தையும் வேண்டினா. சுபகாரியத்தடைகள் ஒன்றன்பின் ஒன்றாக விலகி சுபிட்சம் சேரும்க. தரல் பெறல்ல இருந்த சுணக்கங்கள் நீங்கும்க பழைய கடன்களை நேரடியாகப் பைசல் செய்வதும் உடனுக்குடன் குறித்து வைப்பதும் நல்லதுங்க.

செய்யும் தொழில்ல சீரான லாபம் வரத்தொடங்கும்க. வரவு சீராகும்போது, அரசுக்கு செலுத்தவேண்டிய வரி முதலானவற்றை உடனே செலுத்திடுங்க. இரும்பு: அழுகும்பொருள் வர்த்தகம் செய்யக் கூடியவங்க கூடுதல் கவனமா இருங்க

அரசு, அரசியல்துறை சார்ந்தவங்க, திட்டங்கள் எதையும் முழுமையாக ஆலோசிச்சும் முறையாகவும் செயல்படுத்தறது அவசியம்க யாருக்கும் ஜாமீன் தர்றதும், வக்காலத்து வாங்கறதும் தவிர்க்கப்படறது நல்லதுங்க. மேலிடத்துக்கு எதிரான விளையாட்டுப் பேச்சையும் தவிருங்க.

பெண்களுக்கு எதிர்பாராத நன்மைகள் வரத்தொடங்கும்க. சேமிப்புகள் சுபசெலவுகளாக மாறும்க வாரிககள் வாழ்க்கைல எதிர்பார்த்த மேன்மைகள் வரத்தொடங்கும்சு. நீண்டகாலமா பிரிஞ் சிருந்த தம்பதியர், மீண்டும் சேரும் சந்தர்ப்பம் உருவாகும். வீண் ரோஷம் பார்க்காம பழைய கசப்பை மறக்கற அவசியம்க. ஹார்மோன் குறைபாடுகள் தெரிஞ்சா தவிர்க்காம சிகிச்சை செய்துக்குங்க

மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தினா, பெரும் வெற்றி காணலாம்சு. தினமும் சிறிதளவாவது உடற்பயிற்சி, தியானம் செய்யறது நல்லதுங்க, கலை, படைப்புத் துறையினர் செல்லும் இடத்தின் சட்டதிட்டங்களை மதிச்சு நடக்கறது அவசியம்க

பயணத்துல தலைக்கவசம் முக்கியம்க. சாலை விதிகளை மீறாம இருந்தா, உங்க விதி நல்லதையே செய்யும்.

ஏற்கெனவே இடதுபாக உபாதை உள்ளவங்க கூடுதல் கவனமா இருங்க. கழிவு உறுப்பு, ரத்த நாளம் காது மூக்கு தொண்டை உபாதைகள் வரலாம்க

புதன் கிழமைகள்ல ரங்கநாதரை வணங்குங்க முடிஞ்சா ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்று வணங்கிட்டு வாங்க உங்க வாழ்க்கை ரம்யமாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow