அச்சச்சோ.. திடீரென உள்வாங்கிய கடல்.. அச்சமடைந்த மீனவர்கள்..

திருப்பாலைக்குடியில் 1 கிமீ தூரம் கடல் உள்வாங்கியதால் 100க்கும் மேற்பட்ட படகுகள் தரை தட்டி நின்றது.

Sep 20, 2024 - 13:29
அச்சச்சோ.. திடீரென உள்வாங்கிய கடல்.. அச்சமடைந்த மீனவர்கள்..

திருப்பாலைக்குடியில் 1 கிமீ தூரம் கடல் உள்வாங்கியதால் 100க்கும் மேற்பட்ட படகுகள் தரை தட்டி நின்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை கடலோரக் பகுதியான திருப்பாலைக்குடியில் சுமார் 1கிலோ மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியது. இதனால் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட படகுகள் தரை தட்டி நின்றன. மேலும் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு வர முடியாமல் அவதி அடைந்தனர்.

காற்றின் சுழற்சி காரணமாக செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை கடல் உள்வாங்குவதும் பின்பு இயல்பு நிலைக்கு திரும்புவதும் அவ்வபோது நடக்கும் நிகழ்வு என மீனவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் இன்று திருப்பாலைக்குடியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியதால் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் படகுகளை கரைக்கு கொண்டு வர முடியாமல் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவம் மீனவர்களிடையே  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடல் உள்வாங்கியது எதனால் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடல் உள்வாங்க காரணம் என்ன?

சுனாமி, சூறாவளி, கடல் வெப்பநிலையில் திடீர் மாற்றங்கள், கடல் நீரோட்டங்கள் ஒரு திசையில் இருந்து மற்றொரு திசைக்கு மாறுதல் ஆகிய காரணங்களால் கடல் உள்வாங்குகிறது என அறிவியல் கூறுகிறது.

ஆனால், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கடல் காற்று அதிகமாக இருக்கும். இந்த காற்று கடற்கரைக்கு இணையாக வலுவாக இருக்கும்போது, ​​அவை கடலின் மேற்பரப்பில் உள்ள தண்ணீரை இடமாற்றம் செய்து கடற்கரையிலிருந்து மீண்டும் கொண்டு செல்கின்றன. இது உடனடியாக நிகழலாம், அல்லது பல மணிநேரங்கள், நாட்கள் கூட ஆகலாம். இது உள்ளூர் வானிலையைப் பொறுத்தது என்ற கோணமும் இதில் உள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow