முட்டை வண்டியில் மூட்டை மூட்டையா குட்கா..  பப்ளிக்கா சட்டவிரோத செயல்..சோதனையில் சிக்கிய சகோதரர்கள்..

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முட்டை வியாபாரம் செய்வது போன்ற போர்வையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த சகோதரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

May 4, 2024 - 19:59
முட்டை வண்டியில் மூட்டை மூட்டையா குட்கா..  பப்ளிக்கா சட்டவிரோத செயல்..சோதனையில் சிக்கிய சகோதரர்கள்..

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் சரக்கு ஆட்டோ மூலம் குட்கா போன்ற போதைப் பொருட்கள் கடைகளுக்கு விற்கப்படுவதாக காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி சுரேஷ்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

புகாரின் அடிப்படையில் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் மண்ணூர் பகுதியில்  வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக முட்டை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். 

அப்போது முட்டை அடுக்குகளுக்குப் பின்னால் மூட்டைகளில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.  இதையடுத்து ஆட்டோவில் இருந்த நாகராஜ், சிவா ஆகியோரை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இருவரும் சகோதரர்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும்  பாப்பரம்பாக்கத்தில் மளிகை கடை நடத்தி வருவதும், மண்ணூர், வளர்புரம், மேவளூர் குப்பம், தண்டலம் ஆகிய பகுதிகளில் குட்கா பொருள்கள விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து முட்டை வண்டியில் கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow