இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் என்ன காத்திருக்கு? யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய ராசிபலனில் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களும், முன்னேற்றங்களும் காத்திருக்கின்றன.

Nov 1, 2026 - 07:00
இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் என்ன காத்திருக்கு? யாருக்கு அதிர்ஷ்டம்?

மேஷம்

உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உடனிருப்போர் ஆதரவு கிடைக்கும். இல்லத்தில் சீரான போக்கு நிலவும். தம்பதியர் இடையே அன்னியோன்னியம் உருவாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். பொது இடங்களில் பாராட்டப்படுவீர்கள். அரசு, அரசியலில் அதிரடி நன்மை கிட்டும். செய்யும் தொழிலில் முயற்சிக்கு ஏற்ற வெற்றி கைகூடும். கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். வாகனத்தில் வித்தைகாட்டல் வேண்டாம். அடிவயிறு, தலைவலி உபாதை வரலாம். கணபதி வழிபாடு, களிப்பு தரும்.

ரிஷபம்

முயற்சிகள் முழுமையாகப் பலன்தரும் காலகட்டம். அலுவலகத்தில் அனுகூலக் காற்று வீசும். மனம்போல இடமாற்றம், பதவி கைகூடும். பணிகளில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். குடும்பத்தில் விடியல் வெளிச்சம் பரவும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களில் அவசரம் வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும். பொது இடங்களில் நிதானம் முக்கியம். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தில் நிதானம் தேவை. அரசு, அரசியலில் உள்ளோருக்கு சாதகச் சூழல் உருவாகும். ஜவாப், ஜாமீன் யாருக்கும் தரவேண்டாம். கலைஞர்களின் கனவுகள் நனவாகத் தொடங்கும். வாகனத்தில் நிதானம் முக்கியம். அஜீரணம், வயிறு உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு நன்மை சேர்க்கும்.

மிதுனம்

திட்டமிட்டுச் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் அவசரம் அலட்சியம் கூடாது. பொறுப்பில் திட்டமிடல் திட்டமிடல் மிகமிக முக்கியம். தேவையற்ற ரோஷம் தவிருங்கள். குடும்பத்தில் சுபிட்சம் இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டுப் பேசுங்கள். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். குடும்ப ரகசியங்களைப் பிறரிடம் பகிர வேண்டாம். தரல், பெறலில் நிதானம் முக்கியம். செய்யும் தொழிலில் சுணக்கம் கூடவே கூடாது. அரசு, அரசியலில் உள்ளோர் அகலக்கால் வைக்கவேண்டாம். கலை, படைப்பாளிகள் திட்டமிடல் முக்கியம். பயணத்தில் பிறர் தருவதை ஏற்க வேண்டாம். சுவாசம், கால், கண் உபாதைகள் வரலாம். அரங்கன் வழிபாடு, ஆனந்தம் தரும்.

கடகம்

எண்ணங்கள் ஈடேறக் கூடிய காலகட்டம். அதேசமயம் எதிலும் நிதானம் முக்கியம். அலுவலகத்தில் சுமுகப் போக்கு நிலவும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கைகூடும். மேலிடத்தின் ஆதரவு உண்டு. குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். விலகி இருந்த சொந்தங்கள் விரும்பிவந்து சேரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வரவை திட்டமிட்டுச் செலவிடுங்கள். பூர்வீக சொத்தில் இழுபறி நீங்கும். செய்யும் தொழிலில் முழு கவனம் இருந்தால், செழிப்பு உண்டாகும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். கலை, படைப்புத் துறையினருக்கு திறமை பளிச்சிடும். பயணத்தில் நிதானம் தேவை. காய்ச்சல், தொற்று உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு, தழைக்கச் செய்யும்.

சிம்மம்

அமைதியாகச் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் பொறுமையே பெருமை தரும். உடனிருப்போருடன் தேவையற்ற தர்க்கம் தவிருங்கள். பொறுப்புகளில் அலட்சியம் கூடாது. குடும்பத்தில் வீண் தர்க்கம் வேண்டாம். தம்பதியர் இடையே மனம்விட்டுப் பேசுங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். விலை உயர்ந்த பொருள்களில் அலட்சியம் கூடாது. செய்யும் தொழிலில் தொடர் முயற்சிகள் முக்கியம். புதிய முதலீடுகளில் நிதானம் தேவை. அரசு, அரசியல் துறையினர் வாக்குறுதிகள் தருவதைத் தவிருங்கள். கலை, படைப்புத் துறையினர் வீண் ஜம்பத்தை உதறுங்கள். வாகனப் பழுதில் அலட்சியம் வேண்டாம். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். மாருதி வழிபாடு, மகிழ்வு சேர்க்கும்

கன்னி

ஏற்றங்கள் ஏற்படும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். உயரதிகாரிகள் பாராட்டு கிட்டும். உடனிருப்போரிடம் உரசல் வேண்டாம். இல்லத்தில் இனியவை இடம்பிடிக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். பூர்வீக சொத்தில் வீண் ரோஷம் வேண்டாம். செலவுகளில் நிதானம் தேவை. செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ற உயர்வு வரும். அரசு, அரசியலில் உள்ளோரின் செல்வாக்கு உயரும். மேலிடத்தின் பாராட்டு கிட்டும். கலை, படைப்புத் துறையினரின் முயற்சிகள் பலன் தரும். பயணத்தில் இடைவழியில் இறங்க வேண்டாம். நரம்பு, மூட்டு, சளித் தொந்தரவுகள் ஏற்படலாம். இஷ்டமகான் வழிபாடு இனிமை சேர்க்கும்.

துலாம்

சிந்தித்துச் செயல்பட்டால், சிறப்புகள் சேரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். எதிர்பார்த்த மேன்மைகள் கைகூடி வரும். திட்டமிட்டு நேரம் தவறாமல் செயல்பட்டால், நன்மைகள் தொடரும். இல்லத்தில் சீரான போக்கு நிலவும். உறவுகளுடன் தேவையற்ற தர்க்கம் தவிர்த்தால் நல்லவை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகளால் பெருமை ஏற்படும். வரவை சேமிக்கப் பழகுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். பெரும் முதலீடுகளில் நிதானம் தேவை. அரசு, அரசியல்துறை யினருக்கு எதிர்கால வெளிச்சம் தெரியத் தொடங்கும். கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் கணிசமாக வரும். பயணங்களில் சாலை விதிகளில் அலட்சியம் கூடாது. கால்கள், இடுப்பு உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு பசுமை சேர்க்கும்.

விருச்சிகம்

நன்மைகள் அதிகரிக்கும் காலகட்டம். உபணியிடத்தில் உங்கள் பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு கைகூடி வரும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். தம்பதியர் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். இளம் வயதினர் மனம்போல மாங்கல்யம் அமையும். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். அயல்நாட்டு ஒப்பந்தங்களில் நிதானம் தேவை. அரசு, அரசியல் துறையினருக்கு ஆதரவு நிலைக்கும். கலைஞர்கள் படைப்பாளிகளின் திறமை பேசப்படும். வாகனப் பழுதை உடன் சரிசெய்யுங்கள். தூக்கமின்மை, தோள்பட்டை உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு, செழிப்பு சேர்க்கும்.

தனுசு

நல்லவை அதிகரித்து அல்லவை நீங்கக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் ஆதரவு பெருகும். உடனிருப்போர் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். தம்பதியர் இடையே மனம்விட்டுப் பேசுங்கள். குழந்தைகளால் பெருமை உண்டு. சுபகாரியங்களில் அவசரம் வேண்டாம். வரவை சேமியுங்கள். செய்யும் தொழிலில் ஏற்றம் ஏற்படும். புதிய மாற்றங்களை முழு கவனத்துடன் செய்யுங்கள். அரசு, அரசியலில் உள்ளவர்கள் அகலக்கால் வைக்க வேண்டாம். கலை, படைப்புத் துறையினருக்கு திறமைக்கு ஏற்பத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வரும். பயணத்தில் போதுமான ஓய்வு முக்கியம். பற்கள், எலும்பு உபாதைகள் வரலாம். பரமேஸ்வரன் வழிபாடு, பசுமை சேர்க்கும்.

மகரம்

சங்கடங்கள் நீங்கத் தொடங்கும் காலகட்டம். Y பணியிடத்தில் பலகாலக் கனவுகள் நனவாகும் அறிகுறிகள் தெரியும். பணிவுடன் இருந்தால், மேலிடத்தின் ஆதரவு கிட்டும். எதிர்பாரா இடமாற்றம் வரலாம். குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். பூர்வீக சொத்துகள் ஆதாயம் தரும். குடும்ப விஷயங்களைப் பொது இடத்தில் பேசவேண்டாம். உறவுகள் வருகை ஆனந்தம் தரும். செய்யும் தொழிலில் சீரான போக்கு நிலவும். தேவையற்ற முதலீடுகளைத் தவிருங்கள். அரசு, அரசியலில் திடீர் ஏற்றம் ஏற்படும். கலைத் துறையினருக்கு வாய்ப்புகளில் நிதானம் தேவை. வாகனப் பயணத்தில் கவனச் சிதறல் கூடாது. சைனஸ், அஜீரண உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு, தழைக்கச் செய்யும்.

கும்பம்

பொறுமையாக இருந்தால், பெருமைகள் சேரும் காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடல் முக்கியம். புதிய நபர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். பணத்தைக் கையாளுவதில் நிதானம் முக்கியம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். தம்பதியர் மனம்விட்டுப் பேசுங்கள். வாரிசுகள் விஷயத்தில் அதீத கட்டுப்பாடு வேண்டாம். மூன்றாம் நபரிடம் குடும்ப விஷயங்கள் பேசவேண்டாம். செய்யும் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். எதிர்பாலரிடம் நெருக்கம் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர் பொறுமை காப்பதே நல்லது. கலை, படைப்புத் துறையினருக்கு திறமை வெளிப்படும். வாகனத்தில் வித்தைகாட்டல் கூடாது. ரத்தத் தொற்று, கழிவு உறுப்பு, தலைவலி உபாதைகள் வரலாம். ஆறுமுகன் வழிபாடு, ஆனந்தம் சேர்க்கும்.

மீனம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். அதேசமயம் பிறர் குறையைப் பேசுவதைத் தவிருங்கள். சிலருக்கு எதிர்பாராத பதவி மாற்றம் வரலாம், அது நன்மைக்கே. குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். வயதில் முதியவர்கள் வார்த்தைகளை மதியுங்கள். தரல் பெறலில் நிதானம் தேவை. செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். வர்த்தகக் கடன்களில் அலட்சியம் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலக் காற்று வீசத்தொடங்கும். கலைஞர்களின் திறமை பேசப்படும். வாகனத்தில் நிதானம் மிக முக்கியம். அல்சர், அலர்ஜி, நரம்பு உபாதைகள் வரலாம். பெருமாள் வழிபாடு, பெருமை சேர்க்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow