பிக் பாஸ் 8: விளையாட்டு விபரீதமானது.. கலவரமான டீச்சர், ஸ்டூடண்ட் Prank
விஜய் டிவியில் பிரபலமான சீசன் 8 கடந்த அக்டோபர் 3ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இம்முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.
இதற்கு முன்னர் ஒளிபரப்பான 7 சீசன்களை விடவும் இந்த சீசன் மிகவும் போராக இருப்பதாக ரசிகர்களும் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய் சேதுபதியும் தொடர்ந்து கூறிக்கொண்டே வருகின்றனர்.
இதில் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது ஆக அர்னவ் வெளியேற்றப்பட்டார். மூன்றாவது வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டு இருந்தார். அடுத்த ஐந்தாவது வாரமான நேற்றைய நாளில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டது.
காரணம் இந்த முறை 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களால் பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது அதிக போட்டியாளர்கள் உருவாகி விட்டனர். அதே சமயம், பிக் பாஸ் வீட்டுக்குள் விளையாட்டாக ஆரம்பித்து, விணையாக முடிந்தது.
அதாவது பிக் பாஸ் வீட்டுக்குள் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ஆசிரியர்களை டார்ச்சர் செய்வதே டாஸ்காக கொடுக்கப்பட்டது. சீக்ரெட் டாஸ்காக ஆரம்பத்தில் இருந்த, இந்த டாஸ்க்கில், பலரும் தங்களது பள்ளி காலத்திய காதல் கதைகளை எல்லாம் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்தனர்.
மேலும், பள்ளி மாணவர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த பவித்ரா ஜனனி மற்றும் சத்யா இருவரும் தொடக்கத்தில், ஆசிரியர்களை வெறுப்பேற்றும் விதமாக செயல்பட்ட நிலையில், தற்போது இருவரும் நிஜமாகவே காதலிக்க தொடங்கிவிட்டனர்.
ஆனால், இவர்களுக்கு இடையே புகுந்த நண்பர் ராணவ், இருவருக்குள் சண்டையை மூட்டிவிட்டு இருக்கிறார். இதனால், அடுத்து என்ன நடக்கும் என சுவராஸ்யமாக போய்கொண்டிருக்கிறது பிக் பாஸ் இல்லம்.
What's Your Reaction?