பிரபல கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிப்பு 

பிரபல கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 1975இல் எழுத்தாளர் அகிலன், 2002இல் ஜெயகாந்தன் ஆகியோர் ஞானபீடம் விருது பெற்றுள்ளனர். 7 தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண், சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை கவிஞர் வைரமுத்து வென்றுள்ளார். 

பிரபல கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிப்பு 
பிரபல கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது

"ஞானபீடம் விருது இலக்கியத்துக்குப் பெரிதினும் பெரிது; தமிழுக்கு அரிதினும் அரிது. ஞானபீடம் விருது என் வயதைக் குறைத்துவிட்டது; இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும்" என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-தமிழ் மொழியின் செழுமையையும், மனித உணர்வுகளின் ஆழத்தையும் கவிதைகளாலும் பாடல்களாலும் உலகிற்கு எடுத்துச் சென்ற கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு உயரிய ஞானபீட விருது வழங்கப்பட்டிருப்பது தமிழ் இலக்கிய உலகிற்கே பெருமை அளிக்கும் செய்தியாகும். 

ஞானபீட விருது வழங்க மிகவும் பொருத்தமானவர் கவிஞர் வைரமுத்து. இலக்கியத்திலும், திரைப்படப் பாடல்களிலும் தனித்துவமான முயற்சியால் தலைமுறைகளைத் தொட்டவர் கவிஞர் வைரமுத்து. அவரது படைப்புகள் தமிழ் மொழியின் இனிமையையும் சிந்தனையின் வளத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த உயரிய விருதைப் பெற்ற கவிஞர் வைரமுத்துக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மேலும் பல சிறந்த படைப்புகளை உருவாக்கி தமிழ் மொழிக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் பெருமை சேர்க்க விரும்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow