சென்னைஉட்பட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.

Nov 15, 2024 - 11:17
சென்னைஉட்பட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 12 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,  “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதேப்போல், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது. அதேபோல் நவ.16 மற்றும் 17ம் தேதியில் தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நவ.18ம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

நவ.19ம் மற்றும் 20ம் தேதி வரை தமிழகத்தில்   ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow