மேஷ ராசிக்கான சனி வக்ர பலன்கள்! - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
மேஷம் ராசிக்கான சனி வக்ர பலன்களை(15.7.2026-30.11.2026] கூறுகிறார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ..
நவகிரஹங்களில் எல்லோராலும் அச்சத்துடனும் பக்தியுடனும் பார்க்கப்படும் கிரஹம் சனி மட்டுமே. அதற்குக் காரணம், சனைசரன், சனிபகவான் என்றெல்லாம் போற்றப்படும் சனி கிரஹம் மட்டுமே, ஒருவரது வாழ்க்கையில் அத்தனைவிதமான பாடங்களையும் கற்றுத் தரக்கூடியது என்பதுதான்.
நீதிமான், தர்மத்தின் காவலன் என்றெல்லாம் போற்றப்படும் சனிபகவான் பொதுவாக ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் இருப்பார். இந்த அளவுக்கு நீண்டகாலம் இருக்கக் கூடிய கிரஹமும் இவர் மட்டுமே. இந்த வகையில் முந்தைய ராசி, பிந்தைய ராசிகளில் இருக்கும் காலகட்டங்களையும் சேர்த்து ஏழரை ஆண்டுகள் ஒவ்வொரு ராசியினருக்கும் இவர் பலாபலன்களைத் தருவார்.
அதேசமயம் சனிபகவான் ஒரு ராசியில் இருந்தாலும் வக்ரகதியாகும் சமயத்தில் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ அங்கே இருந்து முன்னாக நகர்ந்து, முந்தைய நட்சத்திரத்தில் வக்ரம் பெறுவார். அந்த சமயத்தில் அதுவரை அவர் அளித்துவந்த பலாபலன்களில் சில மாற்றங்களைத் தருவார்.
உதாரணமாக விரய ஸ்தானத்தில் இருப்பவர் என்றால், அதனை மேலும் அதிகப்படுத்துவார். இது எதிர்மறையாகத் தோன்றினாலும் விரயத்துக்கு ஏற்ற வகையில் வரவும் இருக்க வேண்டும் என்பதால், வரவும் அதிகரிக்கும். அதேசமயம் செலவுகளில் திட்டமிடல் இருந்தால், விரயம் சுபசெலவாதிசழிப்பாக நிலைக்கும்.
இது உதாரணம் மட்டுமே. இதுபோல ஒவ்வொரு ராசிக்கும் அவரது வக்ரகாலத்தில் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும். நன்மைகள் அதிகரிக்கவும், பாதிப்புகள் இருப்பின் அவற்றின் வீரியத்தைக் குறைக்கவும் எந்த மாதிரியான பரிகாரங்களைச் செய்வது நல்லது? போன்றவையெல்லாம் இந்தப் பலன்களின் சொல்லப்பட்டிருக்கின்றன.
சனிபகவான், இந்தப் பராபவ ஆண்டில் ஆனிமாதம் 31 ஆம் தேதி, (15.7.2026) அன்று வாக்கியப்பஞ்சாங்கத்தின்படி, உத்திரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் மீனம் ராசியில் வக்ரகதியாகிறார். இவர் மீண்டும் கார்த்திகை மாதம் 14 ஆம் தேதி,(30.11.2026) அன்று உத்திரட்டாதி நட்சத்திரம் 1 ஆம் பாதம் மீனம் ராசியில் வக்ரகதியாகிறார்.
சனிபகவான் வக்ரகதியாகி இருக்கக் வக்ரகதியாகி இருக்கக் கூடிய இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும், எந்த தெய்வத்தை வணங்குவது சிறப்பு என்பதையெல்லாம் முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
எளிய பரிகாரமாக அந்தந்த தெய்வத்தைக் கும்பிடுங்கள். இயன்றால், உரிய பரிகாரக் கோயிலுக்குச் சென்று வாருங்கள். அல்லது, அவரவர் இல்லத்தின் அருகே உள்ள கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள்.
சகல தெய்வங்களின் ஆசியாலும், சனிபகவானின் அனுகிரஹத்தினாலும் உங்கள் வாழ்வில் எல்லா நன்மைகளும் சேரும். நாள் எல்லாம் திருநாளாகும்.
மேஷ ராசிக்கான பலன்கள்:
சனிபகவான், உங்க ராசிக்கு பன்னிரண்டாம் இடமான விரய ஸ்தானத்துல வக்ரகதி அடைஞ்சிருக்காருங்க இத்தகைய அமைப்புனால, உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கலாம்சு, அதை முன்கூட்டியே திட்டமிட்டு, சுபவிரயமாக மாற்றிக்கறது
வீட்டுல நிம்மதி நிறையும்க விலகி இருந்த சொந்தங்களும் பந்தங்களும் விருப்பத்தோட திரும்ப வந்து சேரும்க. சுபகாரியங்கள் அதிகரிக்கும்க அதனால, சுபசெலவுகளும் அதிகரிக்கும்க வரவு தொடர்ந்தாலும் செலவும் சேர்ந்தே வரும்சு. அதெல்லாம், அவசியமான செலவாக இருக்கும்படி திட்டமிட்டு செய்யறது. நல்லதுங்க. சிலருக்கு புதுவீடு, வாகனம் வாங்கும் யோகமும் உண்டுங்க குடும்பத்துடன் குலதெய்வ தரிசனம் செய்யவும். சுற்றுலா, யாத்திரைகள் செல்லவும் நேரம் வரும்க
செய்யும் தொழில்ல இருந்த சுணக்கங்கள் நீங்கும்க. புதிய முதலீடுகளை திட்டமிட்டு செய்தால் லாபம் பெருகும்சு கூட்டுத்தொழில்ல இருக்கறவங்க தனித்துப் புதுமுயற்சி செய்யும் சூழல் வரலாம்க அது நன்மையே தரும்க எத்த சமயத்திலும் குறுக்கு வழி முயற்சிகளைத் தவிர்த்தா, சறுக்கிவிழாம இருக்கலாம்
பெண்களுக்கு திடீர் யோகத்தால வீடு, மனை, ஆபரணம் சேரும் வாய்ப்பு உண்டுங்க. அதேசமயம் விலை உயர்ந்த பொருட்களை இரவல் தராமலும் பெறாமலும் இருப்பது நல்லதுங்க, மனதுல இருந்த இனம்புரியாத குழப்பங்கள் திரும்க பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் நிச்சயம் கைகூடிவரும்க மனம்போல மாங்கல்யமும், மகப்பேறும் அமையும்க. மாணவர்களுக்கு மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும்க அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படிப்பவர்கள் அசாத்ய சாதனைகளைச் செய்யவும். சத்தர்ப்பம் வரும்க. கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் கணிசமாக வரும்க அரசு வழி பாராட்டு, பரிசுகளும் கிடைக்க வாய்ப்பு உண்டுங்க. அரசு, அரசுத் துறையினருக்கு செல்வாக்கு உயரும்சு. திடீர் பதவி, பொறுப்புகள் வரும்க
பயணங்களின்போது அவசரம் கூடாதுங்க, இடைவழி உணவுகளை அவசியம் இல்லாம எடுத்துக்க வேண்டாம்க
உடல்நலத்துல இதுநாள்வரை வாட்டின உபத்திரவங்கள் குணமாகி நிம்மதி தரும். அதேசமயம் தேவையற்ற டென்ஷன், தூக்கமின்மை, அஜீரணம் நரம்பு உபாதைகள் வரலாம்க
செவ்வாய் அல்லது ஞாயிற்றுக் கிழமைகள்ல துர்க்கையைக் கும்பிடுங்க முடிஞ்சா ஒருமுறை கதிராமங்கலம் சென்று வணங்குங்க. வாழ்க்கை வசந்தமாகும்.
What's Your Reaction?