பண மோசடி வழக்கில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர்? விசாரணைக்கு ஆஜாராக போலீஸ் சம்மன்...

போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி  வழக்கில் முன்னாள் அமைச்சர் சிவசங்கரை விசாரணைக்கு ஆஜாராகும் படி மத்திய குற்றப் பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

பண மோசடி வழக்கில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர்?  விசாரணைக்கு ஆஜாராக போலீஸ் சம்மன்...

திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றியவர் தான் முன்னாள் அமைச்சர் சிவசங்கர். இவர் மீது எஸ்.எஸ்.ஐ.சீனிவாசன் என்பவர் தன் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 23 லட்சம் என்னிடம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார்.

இதற்கு ஒப்புக் கொண்டு சிவசங்கரின் நெருங்கி நண்பனரான இளஞ்செழியன் வங்கிக் கணக்கில் அந்த தொகையை நான் செலுத்தினேன். அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்திக்கவும் இளஞ்செழியன் ஏற்பாடு செய்தார். அப்போது என் மகனுக்கு போக்குவரத்து துறையில் வேலை உறுதி என்றும் அதற்கான பணி நியமன ஆணை உங்களுக்கு விரைவில் கிடைக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்திருந்தார்.

இதுவரையும் தன்னுடைய மகனுக்கு வேலை எதுவும் வழங்கப்படவில்லை. இது குறித்து அவரிடம் கேட்ட போது சரியான பதில்  அளக்கவில்லை. மேலும் பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு இதுவரையும் வேலை வழங்காமல் இளஞ்செழியனும் அமைச்சர் சிவசங்கரும் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டனர். எனவே அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  

சீனிவாசனின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த வழக்கில் இளஞ்செழியன் மீதும்  எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் சிவசங்கருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சிவசங்கரை வருகிற 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி மத்திய குற்ற பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள இளஞ்செழியன் வீட்டிற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

ஏற்கனவே பண மோசடி வழக்கில் திமுக அமைச்சரும் எம்எல்ஏவமான செந்தில் பாலாஜி மீது வழக்கு விசாரணை நடைபெற்று  வருகின்றது இப்படி தொடர்ந்து திமுக அமைச்சர்களின் மீது பண மோசடி வழக்கு வருவது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow