தாலியா... வெறும் செயினா? த்ரிஷா கழுத்தில் என்ன அது?
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா கிருஷ்ணன். இவரது நடிப்பு, படங்கள் மட்டுமல்ல... அவ்வப்போது அவரது திருமணம் குறித்த வதந்திகளும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகின்றன.அந்த வகையில், த்ரிஷா அணிந்திருக்கும் ஒரு செயின் தற்போது இணையத்தில் ஹாட் டாபிக்காகியுள்ளது.
சமீபத்தில் த்ரிஷா அணிந்திருந்த செயினை உன்னிப்பாகக் கவனித்த சில நெட்டிசன்கள், அது கேரள கிறிஸ்தவ திருமணங்களில் மணப்பெண்கள் அணியும் ‘மின்னு’ எனப்படும் மாங்கல்யம் போன்ற நகை எனக் கூறி வந்தனர்.. இதையடுத்து, “த்ரிஷா ரகசியமாக திருமணம் செய்துகொண்டுவிட்டாரா?”, “மணமகன் யார்?” என சமூக வலைதளங்களில் விதவிதமான கேள்விகள் எழுந்தன.
ஆனால், அந்த செயின் ஒரு படப்பிடிப்புக்காக அணியப்பட்ட நகையாக இருக்கலாம் அல்லது வெறும் ஃபேஷன் நகையாகக்கூட இருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர்.
இந்த சர்ச்சை ஓய்ந்து, விஜய் – த்ரிஷா சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது. கடந்த சில காலமாகவே, த்ரிஷா – விஜய் சந்திப்பு நிகழ்வுகள் பேசுபொருளாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நடிகை ராதிகாவுடன் எடுத்த புகைப்படத்தை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின் இருக்கும் இடத்தில் ஹார்ட் எமோஜி வைத்திருப்பது தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுதான் இப்போது நெட்டிசன்களின் கேள்வியை இன்னும் பெரிதாக்கியுள்ளது. “சாதாரண செயின்தானே... அதை ஏன் மறைக்க வேண்டும்?”, “அப்படியென்றால் அது தாலிதானா?”, “திருமண விஷயத்தில் த்ரிஷா ஏதாவது மறைக்கிறாரா?” என சமூக வலைதளங்களில் பலரும் தங்களது யூகங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதேநேரம், த்ரிஷா தனது திருமணம் தொடர்பாக கடந்த காலங்களிலும் பல்வேறு வதந்திகளை எதிர்கொண்டிருக்கிறார். அவற்றில் சிலவற்றை அவர் மறுத்தும் இருக்கிறார். எனவே, தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்தை மட்டும் வைத்து அவர் திருமணம் செய்துகொண்டதாக உறுதியாகக் கூற முடியாது.
ஒரு செயின்... அதற்கு மேல் ஒரு ஹார்ட் எமோஜி... அவ்வளவுதான்! ஆனால், நெட்டிசன்களின் கற்பனை மட்டும் எகிறிக்கொண்டிருக்கிறது. த்ரிஷா தரப்பில் இதுகுறித்து ஏதேனும் விளக்கம் வெளியாகிறதா என்பதுதான் இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
What's Your Reaction?

