மாமே...ரெடியா? அஜித்தின் Good Bad Ugly டிரைலர் இன்று வெளியீடு!

அஜித், த்ரிஷா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

Apr 4, 2025 - 12:01
மாமே...ரெடியா? அஜித்தின் Good Bad Ugly டிரைலர் இன்று வெளியீடு!
ajith good bad ugly movie

அஜித் குமார் நடிக்கும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்றும், கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஏராளமான மாஸ் தருணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அண்மையில் நேர்காணல் ஒன்றில் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

குட் பேட் அக்லி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்றுள்ள 2 பாடல்களும் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பினை தூண்டியுள்ளது.

இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படத்தயாரிப்புக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இன்று வெளியாகும் டிரைலர் நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow