வெற்றி நெருக்கடியில் டெல்லியுடன் மோதும் மும்பை.. ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா லக்னோ?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கும் தொடங்கும் ஆட்டத்தில் டெல்லியை மும்பையும், இரவு 7.30 மணிக்கும் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தானை லக்னோவும் எதிர்கொள்கின்றன.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 43-வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 9 ஆட்டங்கள் விளையாடி 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும்.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் மும்பை அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
இரவு 7.30 மணிக்கு லக்னோ ஏகானா மைதானத்தில் நடைபெறும் 44-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
சஞ்சு சாம்சன் தலைமையில் அபாரமான பார்மில் உள்ள முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை குவித்து, 5-வது ஆட்டத்தில் தோல்வியை கண்டாலும் பின்னர் ஹாட்ரிக் வெற்றியை குவித்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றியையும், 1 தோல்வியையும் கண்டு புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றியும், 3 தோல்வியும் கண்டு புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளது. நடப்பு சீசனில் இவ்விரு ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இதுவாகும். முதல் போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வியடைந்த லக்னோ அதற்கான பதிலடியை கொடுக்கமா என்பதை இன்றைய ஆட்டத்தில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?