நடிகர் தனுஷூ எனக்கு ரொம்ப பிடிக்கும் : நடிகை மிருணாள் தாக்கூர் ஓபன் டாக்

நடிகர் தனுஷூ படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், அவரின் ரசிகை நான் என நடிகை மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷூ எனக்கு ரொம்ப பிடிக்கும் : நடிகை மிருணாள் தாக்கூர் ஓபன் டாக்
நடிகை மிருணாள் தாக்கூர் ஓபன் டாக்

நடிகர் தனுஷுக்கும், நடிரை மிருணாள் தாக்கூருக்கும்  காதல் என பல பாலிவுட் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுவரை தனுஷ் - மிருணாள் இணைந்து எந்தப் படத்திலும்  நடிக்கவில்லை. ஆனால் சில பொது இடங்களில் இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். தனுஷும் பாலிவுட்டில் வளர்ந்துவரும் நட்சத்திரம் என்பதால், நடிகை மிருணாள் பிறந்தநாள் விழாவுக்கு அழைக்கப்பட்டு, அதில் கலந்து கொண்டார். 

மேலும் மிருணாள் நடித்த `Son of Sardaar 2' படத்தின் சிறப்பு திரையிடலிலும் தனுஷூ கலந்து கொண்டார். இதை எல்லாம் வைத்து தனுஷுக்கும், மிருணாள் தாக்கூருக்கும் இடையில் காதல் என தகவல்கள் பரவின. அதுமட்டுமின்றி காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் பரவின.

இந்நிலையில் நடிகை மிருணாள் தாக்கூர் அளித்த பேட்டியில்: "தனுஷ் சாரின் `ராயன்', `மாரி', `ராஞ்சனா', `கேப்டன் மில்லர்' போன்ற படங்களை பார்த்தபின் அவரது ரசிகையாக மாறிவிட்டேன். குறிப்பாக `அசுரன்' படத்தை பலமுறைகூட பார்ப்பேன். அவர் ஒரு கலைக்கூடம் போன்றவர். ஒரு நடிகராக அவரிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன. மேலும் அவர் ஒரு பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பல விஷயங்களை அவர் செய்கிறார்.

`Tere Ishk Mein' படப்பிடிப்பில் அவரைச் சந்தித்தபோது நான் தயங்கியபடி `சார் Son of Sardaar படத்தின் திரையிடலில் கலந்துகொள்ள முடியுமா என்று கேட்டேன். அவர் வருவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவர் மிகவும் தன்மையானவர். அவருடன் என்றாவது இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் ஆசை" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow