தமிழகத்தில் 4,700 கோடி அளவில் மணல் கொள்ளை நடந்துள்ளது- அண்ணாமலை பேச்சு

இந்திய அரசியல் வரலாற்றிலேயே எந்த கட்சியும், ஆட்சியும் 30 மாதங்களில் இவ்வளவு கொள்ளை அடித்திருக்க முடியாது.

Nov 30, 2023 - 13:23
Nov 30, 2023 - 14:30
தமிழகத்தில் 4,700 கோடி அளவில் மணல் கொள்ளை நடந்துள்ளது- அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மணல் கொள்ளை நடந்திருப்பதாக மத்திய அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது என அண்ணாமலை பேசியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு அண்ணாமலை வருகை தந்தார். அப்போது அண்ணா நகரில் பாஜக தொண்டர்கள் மேள தாளங்கள் முழங்க சிறப்பாக வரவேற்பளித்தனர். அதனைத்தொடர்ந்து அண்ணா நகர் பகுதியில் இருந்து நடைபயணம் மேற்கொண்டார்.

வரும் வழியில் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள சலவை நிலையத்தில் துணிகளுக்கு அயன் செய்தார்.

அதனைத்தொடர்ந்து கொட்டும் மழையிலும் நனைந்தபடியே பழைய பேருந்து நிலையம் வரை சென்று அங்கு வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அண்ணாமலை, “இந்திய அரசியல் வரலாற்றிலேயே எந்த கட்சியும், ஆட்சியும் 30 மாதங்களில் இவ்வளவு கொள்ளை அடித்திருக்க முடியாது.

குறிப்பாக உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளனர்.தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளில் மட்டும் மணல் கொள்ளையில் மட்டும் 4ஆயிரத்து 700 கோடி ரூபாய் மணல் கொள்ளை மட்டும் நடைபெற்று உள்ளது.இதில் ஆச்சரியம் என்னவென்றால் தமிழக அரசுக்கு மணல் மூலமாக வந்த வருமானம் வெறும் 37 கோடி ரூபாய் மட்டுமே” என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow