திமுக அரசுக்கு இளைஞர்கள் மீது அக்கறை இருக்கிறதா..? - அண்ணாமலை கேள்வி...
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கிராமங்களில் கூட கஞ்சா புழக்கம் அதிகரித்து விட்டது - அண்ணாமலை
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார். தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாக பாஜக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டார்.
தமது போராட்டம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கிராமங்களில் கூட கஞ்சா புழக்கம் அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார். போதைப்பொருள் புழக்கத்தை தமிழ்நாடு அரசு தடுக்க தவறிவிட்டதாக குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, திமுகவினரின் சுயநலம் காரணமாக பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
இளைஞர்கள் குறித்தும் திமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்றும் அண்ணாமலை கடுமையாக சாடியிருக்கிறார்.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனுக்கு கட்சிப் பதவி கொடுத்து அங்கீகாரம் அளித்து, போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டு, தமிழகத்தை, போதைப்பொருள் தலைநகரமாக மாற்றியுள்ள, மக்கள் விரோத திமுக அரசைக் கண்டித்து, @BJP4Tamilnadu சார்பாக, மாபெரும் கண்டன… pic.twitter.com/gmo94g96v1 — K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 12, 2024
What's Your Reaction?