கடலூர் மாவட்ட முழுவதும் விடிய விடிய கனமழை- வீடுகளில் புகுந்த தண்ணீரால் மக்கள் அவதி
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.
கடலூர் மாவட்ட முழுவதும் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக வீடுகளில் புகுந்த தண்ணீரால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.பருவமழை தீவிரமாக இருப்பதால், தொடர்ந்து சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, வேப்பூர், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, திட்டக்குடி, விருத்தாச்சலம், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
What's Your Reaction?