தமிழகத்தில் 77 லட்சம் பேர் வாக்களிக்க முடியாது ? வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க முடிவு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வரக்கூடிய நிலையில் டிசம்பர் 1-ம் தேதி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 77.52 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சீர் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் மொத்தம் 6.36 கோடி சிறப்பு தீவிர திருத்தப் படிவங்கள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டுள்ளது.
அந்த படிவங்களை நிரப்பு கொடுக்க டிசம்பர் 4-ம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசியல் கட்சியினரின் கோரிக்கைபடி டிசம்பர் 11-ம் தேதி வரை படிவங்களை நிரப்பிக்கொடுக்கலாம் என தேர்தல் ஆணையம் காலநீட்டிப்பு செய்துள்ளது.
இந்த நிலையில் டிசம்பர் 1-ம் தேதி 5.8 கோடி வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வாக்காளர் பட்டியலில் 77.52 லட்சம் பேர் நீக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, இறந்தோர் 25.72 லட்சம் பேர், தொடர்புகொள்ள முடியாதவர்கள் 8.95 லட்சம் பேர், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்களில் 39.27 லட்சம் பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3.32 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரிகிறது. சென்னை மாவட்டத்தில் மட்டும் 10.40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
What's Your Reaction?

