கார்த்திக் நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படம் வெளியிட இடைக்கால தடை : சென்னை உயர்நீதிமன்றம்
நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்பட வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்
முன்னதாக இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. ரஜினி பிறந்த தினமான 12-ம் தேதி படம் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து இருந்தது.
இந்தநிலையில், ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அர்ஜூன்லால் சுந்தேரஷிடம்10.35 கோடி கடன் தொகை ஸ்டூடியோ கிரீன் கடன் வாங்கியிருந்தது. வட்டியுடன் சேர்த்து அந்த தொகை தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரமாக உள்ளது. அந்த தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என சொத்தாட்சியர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வு படத்தை வெளியிட இடைக்கால தடை பிறப்பித்தோடு, வழக்கை டிச 8-ம் தேதி ஒத்திவைத்தனர்.
What's Your Reaction?

