தன்னலம் பாராமல் சமூக நலன் காக்கும் மக்களை நடிகர் கார்த்தி கெளரவிக்கும் விழா !
நடிகர் கார்த்தி, சமூகத்திற்கு உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித்தொகை அளிக்கப்போவதாக கடந்த மாதம் நடைபெற்ற கார்த்தி 25 விழாவில் அறிவித்தார்.
நடிகர் கார்த்தி, சமூகத்திற்கு உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித்தொகை அளிக்கப்போவதாக கடந்த மாதம் நடைபெற்ற கார்த்தி 25 விழாவில் அறிவித்தார்.
கடந்த அக்டோபர் மாதம் பிரம்மாண்டமாக நடந்தேறிய கார்த்தி 25 விழாவில் திரைக்கலைஞர் கார்த்தி சிவகுமார் இந்த சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்தார். அதில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தும் விதமாக தலா 1 லட்சம் வீதம் 25 லட்சம் அளிக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் இதற்காக தனி அமைப்பை உருவாக்கி பழங்குடியினர், பழங்குடியின குழந்தைகள், தன்னார்வலர்கள், திருநங்கைகள், மலைவாழ் மக்கள், ஏழை எளிய மக்கள் உதவிட 1 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில் அதை மக்களுக்கு நன்றி தெரிவிக்கவிக்க என திட்டமிட்டோம்.
அதனைத்தொடர்ந்து 25 பள்ளிகளை தேர்வு செய்தோம். மேலும் தன்னார்வலர்களை தேர்வு செய்து உதவி வழங்கலாம் என தம்பிகள் கூறினார்கள். அதன்படி இங்கு வந்து உதவியை பெற்றிகொண்ட அனைவருக்கும் நன்றி என நடிகர் கார்த்திக் தெரிவித்தார். உதவி வேண்டும் என கேட்க தெரியாதவர்களை தேடி சென்று உதவுவது பெரிய விஷயம் என நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி பேசினார். மேலும் பேசிய நடிகர் கார்த்தி இவர்கள் நினைத்திருந்தால் கார் வேணும், வீடு வேண்டும் என்று சென்றிருக்கலாம் ஆனால் மக்களை தேடி சென்று உதவுகின்றனர். இது மிகப்பெரிய விஷயம் என்றும் மேலும் இவர்களை கவுரபப்படுத்த வேண்டும், அடையாளப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன் எனவும் மேலும் இந்தப் பணி தொடர வேண்டும், இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என நெகிழ்ச்சி பொங்க நடிகர் கார்த்தி தெரிவித்தார்.
What's Your Reaction?