அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும்..பாரத் அரிசி திட்டம் !

இன்றைய விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் சுமைகளை குறைக்கும் வகையில் பாரத் அரசு என்ற பெயரில் சில்லறை சந்தைகளில் ரூபாய் 29-க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது என தெரிவித்தனர்.

Feb 3, 2024 - 13:03
அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும்..பாரத் அரிசி திட்டம் !

இன்றைய விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் சுமைகளை குறைக்கும் வகையில் பாரத் அரசு என்ற பெயரில் சில்லறை சந்தைகளில் ரூபாய் 29-க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது என தெரிவித்தனர்.

இந்திய மக்களின் பிராதன உணவு என்பது அரிசியே. இந்நிலையில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அரிசி இருப்பு வைத்திருக்கும் வணிகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய சில்லறை விற்பனையாளர்கள், பதப்படுத்துபவர்கள் உள்ளிட்டோரிடம் இருக்கும் அரிசி இருப்பை வெளியிடுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.

அதனைத்தொடர்ந்து இதன் குறித்து உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறியதாவது : உடைந்த அரிசி, பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத அரிசிகளின் இருப்புகளை வகைப்படுத்தி, வெளியிடுவதை உணவு மற்றும் பொது விநியோகத்துறை மேற்பார்வையிடும் என்று தெரிவித்தார். மேலும் இனிப்பில் அரிசியை பதுக்கி வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு தெளிவான அறிக்கையை அனுப்புவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் பாரத் அரிசி கிலோ ரூபாய் 29 என்ற விலையில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுகிறது. நாஃபெட், கேந்திரிய பந்தர், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு போன்ற சில்லறை விற்பனை நிலையங்களில் இவை எல்லாம் விற்பனை செய்யப்படும் என தெரிவித்தனர்.

மேலும் அரிசி விலை கட்டுக்குள் வரும் வரை ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை எனவும் மலிவு விலையில் பாரத் அரிசி அறிமுகம் செய்வதன் மூலம் சந்தையில் அரிசியின் விலை கட்டுப்படுத்தப்படும். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வாராந்திர ஏலத்தில் ஓஎம்எஸ்எஸ்-ன் கீழ் வழங்கப்படும் கோதுமையின் அளவை 5 லட்சம் மெட்ரிக் அளவிற்கு உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது என்றும் தெரிவித்தனர்.

அதாவது 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளாக விற்பனை செய்யப்பட உள்ள பாரத் அரிசி விற்பனைக்காக முதல் கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே பாரத் ஆட்டா என்ற பெயரில் ரூபாய் 27.50 பல்ஒரு கிலோ கோதுமை மாவும், பாரத் பருப்பு என்ற பெயரில் ரூபாய் 60 க்கு வெள்ளை கொண்டைக்கடலையும் சில்லறை சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow