மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்,..சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி..! யார் இவர்? 

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ். வைத்தியநாதன், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Feb 3, 2024 - 15:03
Feb 3, 2024 - 15:14
மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்,..சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி..! யார் இவர்? 

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ். வைத்தியநாதன், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சிவ் பானர்ஜி, ஓய்வு பெற்றதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதனை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம்  மத்திய அரசுக்கு  அண்மையில் பரிந்துரை செய்திருந்தது.

அதோடு நாட்டில் பெரிய உயர்நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து  ஒரே ஒரு நீதிபதி மட்டுமே தற்போது தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதனை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்வதாக கொலிஜியம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நீதிபதி எஸ். வைத்தியநாதனை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக குறைந்து காலியிடங்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது. 

 மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் இந்த வைத்தியநாதன் கோவையில் பிறந்தவர். சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று 1986-ம் ஆண்டு பார்கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞரானார்.

சிவில் மற்றும் ரிட் வழக்குகளில் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற இவர், 2013-ம் ஆண்டு சென்னை  உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2015-ல் பணி நிரந்தரம் பெற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக  பணியாற்றிவந்தார்.

இதேபோல, இன்னும் சில நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியான ரிது பஹாரி தற்போது உத்திரகண்ட் மாநில தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார். இதன்மூலம் இந்தியாவில் 2-வதாக தலைமைப் பொறுப்பேற்க்கும் பெண் நீதிபதி எனும் பெருமையை பெறுவார் ரிது பஹாரி.  முன்னதாக குஜராத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சுனிதா அகர்வால் பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது. 

இதனைத்தொடர்ந்து,  ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி அருண் பன்சாலி என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ராஜஸ்தான் நீதிமன்றத்தில்  பணியாற்றி வரும் நீதிபதிகள் அதிகளவில் பணி மாற்றம், பதவி உயர்வு பெறுகின்றனர்.  

அருண் பன்சாலியைத் தொடர்ந்து ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி விஜய் பிஷ்னோய் குவாஹதி உயர்நீதிமன்ற தலைமகி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதோடு, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த மனீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா என்பவர் அந்த நீதிமன்றத்திற்கே தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்டத்துறை அமைச்சர்   அர்ஜூன் ராம் மோக்வால் தனது  எக்ஸ் தள பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். 

இதையும் படிக்க   |  அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும்..பாரத் அரிசி திட்டம் !

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow