புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நடிகர் விஜய் ?
சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற இருப்பதாக தகவல் வந்த நிலையில் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் எனவும் சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர் விஜய் அறிவுறுத்தியதாக தகவல் வந்துள்ளது.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் போட்டியிட இந்தியா என்ற கூட்டணியை உள்ளது. இதில் தொகுதி பாங்கீட்டு பிரச்சனை ஒரு பக்கம் சென்றுகொண்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், நடிகர் விஜய் இன்று பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதனைத்தொடர்ந்து மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அக்கூட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் தொடர்ச்சியாக மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கவும், மக்கள் பணிகளை செய்ய தடை ஏற்பட்டால் உடனடியாக தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என ஆலோசனை நடத்திய விஜய் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் எனவும் தகவல் வெளி வந்துள்ளது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அதன் முன்னதாக கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்றனர் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தளபதி விஜய் தனது மக்கள் இயக்கத்தை கட்சியாக அறிவிக்க உள்ளாரா ? இல்லையென்றால், இது குறித்து அதிகாரபூர்வமாக அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தளுக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறாரா ? என்று வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பொறுத்திருந்து பார்ப்போம்.
What's Your Reaction?