மம்தா பானர்ஜி தனித்து போட்டி.. விரக்தியின் வெளிப்பாடு.. அமித் மாளவியா சாடல் !

இந்தியா கூட்டணியில் இருந்தாலும் மக்களவை தேர்தலில் மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Jan 25, 2024 - 12:40
Jan 25, 2024 - 12:43
மம்தா பானர்ஜி தனித்து போட்டி.. விரக்தியின் வெளிப்பாடு.. அமித் மாளவியா சாடல் !

இந்தியா கூட்டணியில் இருந்தாலும் மக்களவை தேர்தலில்  மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் போட்டியிட இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியது. இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் மாநில காட்சிகளுக்கு இடையில் தொகுதி பங்கீட்டில் பிரச்சனை உருவாகியுள்ளது. முக்கிய திருப்பமாக காங்கிரஸ் கட்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில்  முதலில் இருந்தே பங்கீட்டு பிரச்சனை எழுந்துள்ளதால் மேற்கு வங்கத்தில் காங்கிரஸிற்கு இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என மம்தா அறிவித்திருந்தார். அதனை ஏற்க காங்கிரஸ் மறுத்து வந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனியாக போட்டியிட தயார் என தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்தாலும் வரும் மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துளார். மேலும் தேசிய அளவில் என்ன நடந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என்றும் நாங்கள் மதசார்பற்ற கட்சி ஆகையால் இந்த மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக தனித்து போட்டியிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெரும் என நேற்று தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரான அமித் மாளவியா மேற்கு வங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜியை வரும் மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டி என்பது விரக்தியின் வெளிப்பாடே ஆகும் என கடுமையான சாடியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow