கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூஷன்.. விருதில் ஜொலிக்கும் தமிழர்கள் !
இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா மற்றும் பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் மற்றும் விஜயகாந்த் உட்பட ஆகியோருக்கு பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா மற்றும் பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் மற்றும் விஜயகாந்த் உட்பட ஆகியோருக்கு பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருதுகளை நேற்று அறிவித்தது மத்தியரசு. முன்னாள் குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உள்ளிட்ட 132 நபர்களுக்கு பத்ம விருதுகள்அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உட்பட 17 பேருக்கு பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஃபாத்திமா பீவி, பிரபல பின்னணி பாடகி உஷா உதுப் ஆகியோருக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் முக்கிய பிரமுகர்கள், சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 5 பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் மொத்தம் 8 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த, பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து மேலும் பரத நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமண்யத்திற்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பரத நாட்டியக் கலையில் முனைவர் பட்டம் பெற்ற இவர் நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். கலைத்துறையில் இவரது சேவையை கொளரவிக்கும் வகையில் இவருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் மக்களால் அன்பாக ‘கேப்டன்’ என்று அழைக்கப்பட்டவர் கலைத்துறை சேவையை கெளரவிக்கும் வகையில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளி ஒயிற்கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒயிற்கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு கும்மி பயிற்சி அளித்ததற்காகவும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
மேலும் அடுத்ததாக தமிழ்நாட்டின் ஸ்குவாஷ் நட்சத்திரமான ஜோஷ்னா சின்னப்பாவுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் இவர் தொடர்ந்து விளையாட்டுத்துறையில் இந்தியாவுக்காக பல்வேறு பதக்கங்களை பெற்றுத் தந்துள்ளார். நெய்தல் பகுதி மக்களின் வாழ்க்கையை விவரிக்கும்படியான இலக்கியங்களை படைத்து புகழ்பெற்றவர் ஜோ டி குரூஸ். 2013 ஆம் ஆண்டு ‘கொற்கை’ எனும் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற இவருக்கு, இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் ஜி.நாச்சியார் என்பவர் மருத்துவத்துறை சேவைக்காக கலைத்துறை சேவைக்காக நாதஸ்வர வித்துவான் சேஷம்பட்டி டி சிவலிங்கத்திற்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு விருதுகளும் அறிவித்தது தமிழ்நாடு அரசு. மதுரை கொடிக்குளத்தை சேர்ந்த ஆயி பூரணம் அம்மாள் தன் மகளின் நினைவாக 7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு வழங்கியதற்காக முதலமைச்சர் ஆயி பூரணமாளுக்கு சிறப்பு விருதை அறிவித்தார்.
What's Your Reaction?