கால் வயிற்றை மட்டும் நிரப்பிய பட்ஜெட்.. தமிழக விவசாயிகள் சங்கம் ஆவேசம்...

Feb 20, 2024 - 18:55
கால் வயிற்றை மட்டும் நிரப்பிய பட்ஜெட்.. தமிழக விவசாயிகள் சங்கம் ஆவேசம்...

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள் விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை எனவும், விவசாயிகளுக்கு கால் வயிறுதான் நிரம்பி உள்ளது எனவும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி கோவையில் விமர்சனம் செய்துள்ளார்.

வேளாண் பட்ஜெட் குறித்து கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியவர், தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பது குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.

வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் உயிர்சேதம் ஆகியவற்றிக்கு நிதி ஒதுக்கீடு இடம் பெறவில்லை எனவும், வேளாண் தொடர்பான பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக விவசாயிகள் தொடர்பானவர்களிடம் ஆலோசணை நடத்தியிருந்தால் ஒட்டு மொத்த விவசாயிகளுக்கு பயனுள்ள பட்ஜெட்டாக அமைந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.

விவசாயித்திற்கு அறிவித்துள்ள ரூ.36 கோடி குறைவாக இருப்பதாக கூறிய பழனிசாமி, மண் புழு உரம் தயாரிக்க, உழவர் சந்தை மேம்பாட்டுக்கு அறிவிப்பு, பசுந்தீவன உரத்திற்கு ஒதுக்கியுள்ள நிதி போன்ற அறிவிப்புகள் வரவேற்பை பெற்றிருந்தாலும்,  கரும்புக்கு ஒரு கிலோவிற்கு ரூ.250 வீதம் ஒரு டன்னுக்கு 250 கோடி ஒதுக்கீடோடு முடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் அறிவிப்பு விவசாயிகளுக்கு கால் வயிறுதான் நி்ரம்பி உள்ளதாகவும், முக்கால் வயிறு காலியாகத்தான் இருப்பதாக வேதனை தெரிவித்த அவர், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வேளாண்  பட்ஜெட் அறிவிப்புகள் விவசாயிகளுக்கு போதுமான பட்ஜெட்டாக இல்லை எனவும் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow