டி20 உலகக்கோப்பை.. மீண்டும் இந்தியாவுக்காக ரிஷப்.. ரோகித் - பாண்டியா கேப்டன்ஷிப் வெற்றியை தருமா?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

Apr 30, 2024 - 17:24
டி20 உலகக்கோப்பை.. மீண்டும் இந்தியாவுக்காக ரிஷப்.. ரோகித் - பாண்டியா கேப்டன்ஷிப் வெற்றியை தருமா?

17வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. மே 26ஆம் தேதியுடன் ஐபிஎல் நிறைவு பெற உள்ளது. இதனை தொடர்ந்து நடப்பாண்டுக்கான  டி20 உலகக்கோப்பை ஜூன் 1ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பையின் லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள் மற்றும் நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்திய தீவுகளிலும் நடைபெற உள்ளது. 

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான பிட்ச் குறித்து ஆராய பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் அஜித் அகார்கர் நிர்வாகிகளை நியமித்திருந்த நிலையில் பிட்ச்கள் குறித்த அறிக்கையை நிர்வாகிகள் அவரிடம் சமர்பித்துள்ளனர். அதில் பெரும்பாலும் போட்டிகள் நடைபெறும் பிட்ச்கள் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டதால் அதில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பவுலர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்திருந்தது. 

இதற்கிடையில் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே ஒன்றாம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி அறிவித்திருந்தது. இதையடுத்து தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே தங்களது அணிகளை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கு பெறும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ஜெய்ஷ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் , ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், பும்ரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருப்பார்  என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக வீரர்களான சாய் சுதர்சன், அஸ்வின், தினேஷ் கார்த்திக், நடராஜன் ஆகியோரில் ஒருவருக்கு கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம் பெறாதது தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow