தெலங்கானா சாலை விபத்தில் பி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ உயிரிழப்பு..
பிப்ரவரி 19-ம் தேதி லாஸ்யாவின் தந்தை சயன்னாவின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், அடுத்த 4-வது நாளில் மகள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் கண்டோன்மெண்ட் தொகுதியின் எம்.எல்.ஏவான BRS கட்சியின் லாஸ்யா நந்திதா கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தெலங்கானாவில் ஆட்சியில் உள்ள பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் கண்டோன்மெண்ட் தொகுதி எம்.எல்.ஏ சனனா, கடந்த 2023-ம் ஆண்டு உயிரிழந்தார்.இதனால் அத்தொகுதியில் இடைத்தேர்தல் வரவே, அவரது மகள் லாஸ்யா நந்திதாவுக்கு சீட் வழங்கப்பட்டது.இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, கண்டோன்மெண்ட் தொகுதி எம்.எல்.ஏவாக நந்திதா, தெலங்கானா அமைச்சரவையில் இளம் எம்.எல்.ஏவாக இருந்தார்.
இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் நார்கட்பள்ளி அருகே உள்ள செர்லபள்ளி என்ற இடத்தில் லாஸ்யா நந்திதாவின் கார் சென்றபோது, அதன்மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் காயமடைந்த நிலையில், லாஸ்யா நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
இதையடுத்து, நேற்று, படான் செருவு என்ற இடத்தில் சென்றபோது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட எம்.எல்.ஏ அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர். இதுகுறித்து சங்காரெட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 19-ம் தேதி லாஸ்யாவின் தந்தை சயன்னாவின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், அடுத்த 4-வது நாளில் மகள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?