நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை
நாளை மறுநாள் வெளியாக இருந்த நடிகர் கார்த்தி நடித்த “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் வா வாத்தியார் படம் பல பிரச்னைகளை கடந்த 12ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. நீண்ட வருடங்கள் கழித்து நலனின் படம் ரிலீஸாவதால் பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருக்கிறது. ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர். அந்த தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
அந்த தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் சொத்தாட்சியர் மனுவில் கோரியிருந்தார்.
கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 21.78 கோடி ரூபாயை திரும்ப செலுத்தாமல் இருப்பதால் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள வா வாத்தியார் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடனாக பெற்ற 21.78 கோடி ரூபாயை ஞானவேல் ராஜா செலுத்தும் வரை வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அது மட்டுமின்றி வா வாத்தியார் படத்தை அனைத்து ஓடிடி உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் வெளியிட அனுமதியில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
What's Your Reaction?

