தக் லைஃப் திரைப்பட டிஜிட்டல் உரிமம் 150 கோடிக்கு விற்பனையா?
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் 150 கோடி ரூபாய்க்கு விற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் 150 கோடி ரூபாய்க்கு விற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தமிழ்த் திரையுலகின் செல்வம் என்றே நடிகர் கமல்ஹாசனைச் சொல்ல முடியும். தமிழ்த் துறையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகும் கமல்ஹாசனை அறியும். இந்தியத் திரையுலகில் கமல்ஹாசன் நிகழ்த்திய சாதனைகள் பல. மகத்தான சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிற கமல்ஹாசன் திரையுலகுக்கு வந்து 65 ஆண்டுகள் ஆனதை அடுத்து அதனை தக் லைஃப் படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடியுள்ளனர். 1960ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமான கமல்ஹாசன், இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் சவால் நிறைந்த பல பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்.
உலக அளவில் கமல்ஹாசனின் திரைப்பங்களிப்பு குறித்து பல இயக்குநர்கள் வியந்து கூறியுள்ளனர். ஆகவேதான் இவர் உலக நாயகனாகவும் கொண்டாடப்படுகிறார். அவர் தற்போது இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிம்பு, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி உள்ளிட்ட பலரும் நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. 1987ம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படத்துக்குப் பிறகு 35 ஆண்டுககள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணையும் இத்திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இத்திரைப்படத்துக்கு நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் டப்பிங் செய்த வீடியோ சமீபத்தில் வைரலானது. அடுத்த ஆண்டு மே மாதத்தில் இத்திரைப்படம் வெளியாகும் எனக் கூறப்படுகிற நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.149.7 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் இரு பாகங்கள் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் ஆகிய படங்கள் மகத்தான வெற்றி பெற்றன. ஆகவே இவர்கள் இணைந்த இந்தத் திரைப்படமும் வெற்றி பெறும் என்று பெரிதளவில் நம்பப்படுகிறது.
What's Your Reaction?