’வேட்டையனை’ வாங்கிய அமேசான் பிரைம்.. என்னைக்கு ஓடிடி ரிலீஸ் தெரியுமா?
சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் நவம்பர் 8-ம் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
                                சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் நவம்பர் 8-ம் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தசெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். ரஜினியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், மல்லுவுட் ஹீரோ ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள வேட்டையன் திரைப்படம், அதிக எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குகளில் வெளியானது. ரஜினி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளதால், வேட்டையனில் ஆக்ஷன் தெறிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 
அக்டோபர் 10ம் தேதி ரிலீஸான வேட்டையன் படத்துக்கு, கலவையான விமர்சனங்களே கிடைத்தன. படத்தின் பல காட்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸ் சம்பவம் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, கொஞ்சம் ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஒருசில சீன்ஸ் தவிர மற்ற இடங்களில் ரஜினியின் கூஸ்பம்ஸ் சாகசங்கள் இல்லை எனவும், ஆக்ஷன் காட்சிகளில் தலைவர் அதிகம் ரிஸ்க் எடுக்காமல் நடித்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல், கதை, திரைக்கதை, மேக்கிங், பஞ்ச் டயலாக் ஆகியவைகளும் எதிர்பார்த்தளவில் இல்லையென ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
என்கவுன்டருக்கு எதிரான மிக முக்கியமான கருத்தை பதிவு செய்யும் வேட்டையன் படத்தில், ரஜினிகாந்த் நடித்தது வரவேற்புக்குரியது எனவும் பலர் பாராட்டியிருந்தனர். ஆனால், அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியரின் கேரக்டர்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றும், அவர்களை வீணடித்துவிட்டதாகவும் விமர்சித்திருந்தனர். இருப்பினும் வேட்டையன் திரைப்படம் கமர்சியலாக ஹிட் அடித்துள்ளது. அதாவது ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையன் ஏமாற்றமாக இருந்தாலும், ஃபேமிலி ஆடியன்ஸ் இப்படத்தை கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில், உலகளவில் 250கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்த இப்படம் அடுத்த மாதம் 8-ம் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.            
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            