சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு: காயம் காரணமாக ஜேமி ஓவர்டன் விலகல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜேமி ஓவர்டன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி இருப்பது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு: காயம் காரணமாக ஜேமி ஓவர்டன் விலகல்
காயம் காரணமாக ஜேமி ஓவர்டன் விலகல்

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளன. ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. தொடர் தோல்விகளில் இருந்து  சென்னை அணி கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது.  மீண்டும் ஃபிளே ஆப் சுற்றை நோக்கி சென்னை அணி முன்னேறி வருகிறது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய ஆல்-ரவுண்டரான ஜேமி ஓவர்டனுக்கு வலது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக லண்டன் திரும்பவுள்ளதாகவும், தொடரில் இருந்து விலகுவதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அடுத்து வரும்  3 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இந்த நிலையில், ஆல் ரவுண்டர் ஓவர்டனின் விலகல் சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஓவர்டன் 10 போட்டிகளில் விளையாடி 136 ரன்கள் குவித்து, 14 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். ஏற்கெனவே சென்னை அணியின் இளம் வீரர்களான தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே, ஆல்-ரவுண்டர் ராமகிருஷ்ண கோஷு ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow