ஒரு ரூபாய் கூட தரவில்லை; நீங்கள் பேசலாமா?  - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

Feb 25, 2024 - 13:45
ஒரு ரூபாய் கூட தரவில்லை; நீங்கள் பேசலாமா?  - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு ஒரு ரூபாயை கூட மத்திய அரசு வழங்கவில்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு மின்சார வாகனத்தை உற்பத்தி செய்ய வியட்நாமின் வின்பாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் அமைய இருக்கும் புதிய மின்சார கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த தொழிற்சாலை மூலம் மின்சார கார் மற்றும் மின்சார வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகள் தயாரிக்கப்படுகிறது. சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த தொழிற்சாலை அமைகிறது. 

இதை தொடர்ந்து சூசைபாண்டியாபுரம் பகுதியில் நடைபெற்ற விழாவில், கடந்த டிசம்பர் மாதம் நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழையால் வீடுகளை இழந்தவர்கள், சேதமடைந்தவர்கள், மீன்பிடி படகுகள் சேதமடைந்த மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு ஒரு ரூபாயை கூட மத்திய அரசு வழங்கவில்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். ஆனால், மாநில அரசு சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.343 கோடி ஒதுக்கியதாகவும், உயிரிழந்த 52 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டதாகவும் முதலமைச்சர் கூறினார். 

வெள்ளப் பாதிப்பின்போது மட்டும் வந்து பார்வையிடும் மத்திய பாஜக அரசாக திமுக அரசு இருக்காது எனக் கூறிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் சிறந்த ஆட்சி நடைபெறுவதாக தெரிவித்தார். கோவில்பட்டியில் ரூ.10 கோடியில் கடலைமிட்டாய் குறுங்குழுமம் அமைக்கப்படும், வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போது அறிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow