குழந்தை கடத்தல் வதந்தி!! தொடரும் தாக்குதல்கள்... இதுக்கு எண்டே இல்லையா?

Feb 28, 2024 - 13:27
Feb 28, 2024 - 14:06
குழந்தை கடத்தல் வதந்தி!! தொடரும் தாக்குதல்கள்... இதுக்கு எண்டே இல்லையா?

சென்னையில், குழந்தையை கடத்த வந்ததாகக் கூறி வடமாநில நபரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக குழந்தை கடத்தல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் பர்தா அணிந்த பெண் ஒருவர், சாலையில் அமர்ந்திருக்கும் சிறுவனுக்கு மயக்க மருந்து கொண்டு கடத்தி செல்வது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியதால், பல இடங்களில் வட இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தது.

இதையடுத்து, சென்னை பெருநகர காவல் துறை சமூக வலைதளத்தில் பரவி வரும் வீடியோ எகிப்தில் எடுக்கப்பட்ட குறும்படத்தின் காட்சி என்றும், குழந்தை கடத்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தி என விளக்கமளித்திருந்தது. மேலும், இதுதொடர்பான வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது.

இந்த  விளக்கம் வந்து 24 மணி நேரத்திற்குள், சென்னை திருவொற்றியூரில் தாத்தாவுடன் தெருவில் சென்ற குழந்தையை அழைத்த வட மாநிலத்தவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காவல் துறை விளக்கமளித்ததோடு, எச்சரிக்கைவிடுத்தும் தொடரும் வதந்தியால் போலீஸாரே என்ன செய்வதென்று தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க : 

https://kumudam.com/Himachal-in-extreme-political-chaos...-15-MLAs-suspended...-What-is-the-reason

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow