டெல்லி பெயிண்ட் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

படுகாயமடைந்தவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்

டெல்லி பெயிண்ட் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

டெல்லி அலிபூர் மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

அலிபூரின் தயாள்பூர் சந்தையில் பெயிண்ட் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலையில் நேற்று (பிப்.15)  மாலை 5.25 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

பெயிண்ட் தொழிற்சாலை என்பதால் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் கரும்புகையுடன் பல அடி உயரத்திற்கு தீ எழுந்த நிலையில் அங்கிருந்தவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து கூடுதலாக 16 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow