எண்ணூர் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு?-தமிழக அரசு முடிவு

இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

Jan 12, 2024 - 22:11
எண்ணூர் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு?-தமிழக அரசு முடிவு

எண்ணூர் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்மோனாயா கசிவு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்ட அமைக்கப்பட்ட தொழில்நுட்ப குழு ஒரு சில நாட்களில் தமிழக அரசிடம் அறிக்கையை சமர்பிக்க உள்ளது.அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அம்மோனியா கசிவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக முதல்வரின் முதல் தனிச்செயலாளர் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்த ஆய்வுக்கூட்டத்தில் சுற்றுச்சுழல் துறை கூடுதல் தலைமை செயலாளர், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள்  உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிக்கையின் அடிப்படையில் நிவாரணம் வழங்கலாம் எனவும் அது குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow