மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது

மேட்டுப்பாளையம்-உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து இன்று மீண்டும் துவங்கியது.

Jan 12, 2024 - 17:18
Jan 12, 2024 - 22:07
மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது

மழை காரணமாக கடந்த இரு நாட்களாக தடைப்பட்டிருந்த மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலைரயில் போக்குவரத்து இன்று மீண்டும் துவங்கியது.

உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு  இயக்கப்பட்டு வருகிறது.

உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் பெரிதும் கவரும் இம்மலை ரயில் பாதை செங்குத்தான மலை காட்டின் நடுவே செல்வதால் மழை காலங்களில் இதன் இருப்பு பாதையில்  ஏற்படும் மண் சரிவுகளால் சரிவர இயங்க இயலாமல் அடிக்கடி தடைபட்டு நிற்பதும்,இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைவதும் தொடர்  நிகழ்வாகி வருகிறது.

மலைப்பாதையில் பெய்த தொடர் மழை காரணமாக கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில்  நிலையம் வரை ஒரே சில இடங்களில் சிறிய அளவில் மண் சரிவுகள் ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களாக மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. 

தற்போது மழையின் தீவிரம் குறைந்ததாலும்  மண்சரிவுகளை சீரமைக்கும் பணி  நிறைவடைந்ததாலும்  மேட்டுப்பாளையம்-உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து இன்று மீண்டும் துவங்கியது.

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை வழக்கம் போல் காலை 7.10 மணிக்கு உதகை நோக்கி நீலகிரி மலைரயில் புறப்பட்டடு சென்றது.இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தபடி  உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow