ஊழல் திமுக அரசு-பிரதமர் மோடி: என்டிஏ 10 ஆண்டு துரோகம்-முதல்வர் ஸ்டாலின்: வார்த்தை மோதல்

பிரதமர் மோடி மாலை தமிழகம் வரவிருக்கும் நிலையில், ஊழல் திமுக அரசு என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார். 

ஊழல் திமுக அரசு-பிரதமர் மோடி: என்டிஏ 10 ஆண்டு துரோகம்-முதல்வர் ஸ்டாலின்: வார்த்தை மோதல்
என்டிஏ 10 ஆண்டு துரோகம்-முதல்வர் ஸ்டாலின்: வார்த்தை மோதல்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார்.இந்த நிலையில், தமிழக பயணத்துக்கு முன்னதாக தனது எக்ஸ் பக்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தமிழ்நாடு இருக்கிறது என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட பதிவியில் தெரிவித்திருப்பதாவது: “தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். 

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளப் பதிவில்," தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே...

தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் Samagra Shiksha கல்வி நிதி எப்போது வரும்?Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?

தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?"MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?

பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!",இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow