பள்ளி சீருடையிலேயே அரிவாளோடு மாணவன் "இன்ஸ்டா ரீல்ஸ்" போலீஸ் தீவிர விசாரணை
ரீல்ஸ் மோகத்தைல் மாணவ சமுதாயம் சீரழிந்து வருகிறது. ஓடும் ரயிலில் சாகசம் செய்வது, கத்தியுடன் ரீல்ஸ் வெளியிடுவது வாடிக்கையாகி விட்டது. பள்ளி சீருடையில் அரிவாளோடு மாணவன் ரீல்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரீல்ஸ் மோகம் இளைஞர்களை ஆட்டிப்படைக்கிறது என்பதற்கு தினமும் சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்படும் பல்வேறு விதமான ரீல்ஸ்களே உதாரணம். குறிப்பாக கத்தியோடு ஆட்டம் போட்டபடியும், மிரட்டல் விடுப்பது போலவும் பலவிதமான ரீல்ஸ்களை பார்த்து இருப்போம். எல்லை மீறி வடமாநிலத்தைச் சேர்ந்தவரை வெட்டும் ரீல்ஸ் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
அதே போன்று பிறந்தநாட்களில் பட்டாகத்தியால் கேக் வெட்டுவது போன்ற வீடியோக்களிலும் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இது போன்ற வீடியோக்களை பார்த்து மேலும் சிலரும் இது போன்று ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகிறது.
லைக்ஸ்களுக்காக கல்லூரி மாணவர்கள் கத்தியோடு ரீல்ஸ் போடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. தற்போது பள்ளி மாணவர்களும் அதனை கையில் எடுத்து ரீல்ஸ் போடுவது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. பள்ளி மாணவன் ஒருவன் அரிவாளோடு ரீல்ஸ் பதிவிட்டு வைரலாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டில் பயன்படுத்தபடும் அரிவாளை வைத்து கொண்டு அந்த மாணவன் பள்ளி சீருடையிலேயே பதிவிட்டு இருக்கிறார். அந்த மாணவனின் இன்ஸ்டா பக்கத்தில் அது போன்ற வீடியோக்கள் மட்டுமே இடம் பெற்று இருப்பது வேதனையான ஒன்று. இந்த வீடியோ குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?

