என்ன கசப்பு இருக்கிறது.. மகிழ்ச்சியாக தான் இருக்கிறோம்.. செல்வப்பெருந்தகை ட்விஸ்ட்

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக கூட்டணி அறிவிக்காத நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் உரை பேசுபொருளாகியுள்ளது.

Mar 1, 2024 - 08:27
என்ன கசப்பு இருக்கிறது.. மகிழ்ச்சியாக தான் இருக்கிறோம்.. செல்வப்பெருந்தகை ட்விஸ்ட்

சென்னையை அடுத்த குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட அரசுக்கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில், கின்னஸ் சாதனை படைப்பதுபோல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவை மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனக் கூறினார். அவரது பணிகள் இந்தியாவுக்கே தெரிந்தது எனவும் கூறி டி.ஆர்.பாலுவுக்கு செல்வப்பெருந்தகை பிரசாரம் மேற்கொண்டார். திமுக தங்களது வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி கூட முடிவாகாத நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளராக டி.ஆர்.பாலுவை அறிவித்து அவருக்கு செல்வப்பெருந்தகை பிரசாரம் மேற்கொண்டது பேசுபொருளாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கசப்பு இருப்பதாகக் கூறிய அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கருத்துக்கு பதிலளித்தார். ஏற்கனவே மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறோம் - 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow