பயணிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசிய நடத்துநர் உரிமம் தற்காலிமாக ரத்து

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Dec 1, 2023 - 17:38
Dec 1, 2023 - 19:19
பயணிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசிய நடத்துநர்  உரிமம் தற்காலிமாக ரத்து

கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து தினந்தோறும் 100க்கணக்கான தனியார் மற்றும் அரசு பஸ்கள் குறிஞ்சிப்பாடி, வடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று விருத்தாச்சலம் செல்வதற்காக தயார் நிலையில் இருந்தது.அப்போது தனியார் பஸ்சின் கண்டக்டர், விருத்தாச்சலம் பகுதிக்கு மட்டும் பயணிகள் ஏற வேண்டும் என கூறிக்கொண்டு இருந்தார்.அப்போது குறிஞ்சிப்பாடிக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் ஏறுவதற்கு முயன்றபோது, கண்டக்டர் தகாத முறையில் பேசி பஸ்சில் ஏற வேண்டாம் என பயணிகளிடம் கூறினார்.இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய வீடியோ வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படி வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு அருணாச்சலம் தலைமையில் இன்றுகாலை சம்பந்தப்பட்ட தனியார் பஸ்சை நிறுத்தினர். பின்னர் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.தகாத முறையில் பேசிய கண்டக்டர், டிரைவரின் லைசென்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதற்கு பொதுமக்கள் மற்றும் பயணிகளிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow