தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்- ரூ.10 கோடிக்கு வருவாய் இழப்பு
போராட்டம் காரணமாக சரக்குகள் ஏற்றி இறக்கும் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது
துறைமுகங்களை தனியார் மயமாக்கும் திட்டங்களைக் கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், தூத்துக்குடியிலும் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில், அரசு துறைமுகங்களை தனியார் மயம் மற்றும் விற்பனை செய்வதை கண்டித்தும் துறைமுக ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய ஒப்பந்தம் மற்றும் போனஸ் ஒப்பந்த பண பலன்களை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி துறைமுகம் முன்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசு மற்றும் துறைமுக நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டம் காரணமாக சரக்குகள் ஏற்றி இறக்கும் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. அதனால் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.
What's Your Reaction?