2026 ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு ரூ. 3 ஆயிரம் வழங்க திமுக அரசு முடிவு ?

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ 3 ஆயிரம் வழங்க திமுக அரசு முடிவு செய்துள்ளது.

2026 ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு ரூ. 3 ஆயிரம் வழங்க திமுக அரசு முடிவு ?
பொங்கல் பரிசுத்தொகுப்பு ரூ. 3 ஆயிரம் வழங்க திமுக அரசு முடிவு ?

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு வந்த முதல் பொங்கலான 2022ம் ஆண்டில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவில்லை. அது கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், 2023 மற்றும் 2024ம் ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்கப்பட்டது. நடப்பாண்டில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட்ட நிலையில் ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை.

திமுக ஆட்சி அமைந்து 4ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

 இது தொடர்பாக அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோசனை நடத்திய ஸ்டாலின். பொங்கல் தொகுப்புடன் எவ்வளவு பணம் வழங்குவது அதற்கான நிதி ஆதாரங்களை ஆராயவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இந்தநிலையில் அரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் பொங்கல் தொகுப்பு மற்றும் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கலாம் என அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர்.

 சட்டமன்ற தேர்தலில் பொங்கல் பரிசுதொகுப்பு திமுகவிற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பதால், விரைவில் அதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளிடுவார் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow