10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்! 30 நிமிடங்களுக்கு முன்பே வர அறிவுறுத்தல்...

இன்று 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், அரை மணி நேரம் முன்னதாகவே தேர்வு நடைபெறும் பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் வந்து சேர வேண்டும்.

Mar 26, 2024 - 06:08
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்! 30 நிமிடங்களுக்கு முன்பே வர அறிவுறுத்தல்...

தமிழ்நாடு முழுவதும் இன்று 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், அரை மணி நேரம் முன்னதாகவே தேர்வு நடைபெறும் பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் வந்து சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு இன்று (மார்ச் 26) தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக பிப்ரவரி 23 முதல் 29-ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடந்தன. கடந்த பிப்ரவரி 24-ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வுக்கான தேர்வு நுழைவுச் சீட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அவற்றை மாணவர்கள் தங்களது பள்ளிகளில் இருந்து பெற்றுக்கொண்டார்கள். அதன்பின்னர் இன்று தேர்வு தொடங்கும் நிலையில், முடிவுகள் மே 10-ம் தேதி வெளியாகும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தாண்டு, தமிழ்நாடு முழுவதும் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 9.38 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களைக் கண்காணிக்க 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள், ஹால்டிக்கெட்டை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில், 30 நிமிடங்கள் முன்னதாக மாணவர்கள் வந்து சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 10.10 வரை கேள்வித்தாள்களை வாசிக்க அவகாசம் கொடுக்கப்படும் என்றும், அதன்பின் தேர்வு தொடங்கி, 1 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow