அதிமுக பொதுக்குழு சாப்பாடு மெனு: 10 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவல், முட்டை மசாலா சுடசுட ரெடி
அதிமுக பொதுக்குழுவில் நிர்வாகிகளுக்கு பரிமாற 10 ஆயிரம் பேருக்கு மட்டன்பிரியாணி, வஞ்சிரம் மீன், முட்டை மசாலா என அசைவ உணவோடு, சைவ உணவும் சுடசுட தயாராகி வருகிறது.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு இன்று காலை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறஉள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் இருந்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு காலையில் டிபன் வழங்கப்பட்டது.
காலை டிபனில், கேசரி, வடை, பொங்கல், இட்லி, சாம்பார், கார சட்னி, தேங்காய் சட்னி, வாட்டர் பாட்டில், காபி / டீ. ஆகியவை இடம் பெற்று இருந்தன.
மதிய அசைவம் மற்றும் சைவ உணவுகள் பரிமாறப்பட உள்ளது. அதன்படி பிரட் அல்வா, மட்டன் பிரியாணி, ஆனியன் தயிர் பச்சடி, கத்திரிக்காய் கட்டா, மட்டன் குழம்பு, சிக்கன் 65, வஞ்சரை மீன் வருவல், முட்டை மசாலா, வெள்ளை சாதம், தக்காளி ரசம், தயிர், இஞ்சி புளி மண்டி, பருப்பு பாயாசம் ஆகியவை அசைவ உணவு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
சைவ உணவு பட்டியலில், தம்ஃப்ரூட் அல்வா, புடலங்காய் கூட்டு, சைனீஸ் பொரியல், மாவடு இஞ்சி, நிலக்கடலை மண்டி, பிளாக்காய், உருளை மசாலா, பருப்பு வடை, அப்பளம், ஊறுகாய், மோர் மிளகாய், வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, சாதம், கத்தரிக்காய், முருங்கக்காய், பீன்ஸ் சாம்பார், வத்தல் குழம்பு, தக்காளி ரசம், தயிர், பருப்பு பாயாசம், வாழைப்பழம் ஆகிய இடம் பெற்றுள்ளன.
நேற்று இரவு முதல் புதுக்கோட்டையை சேர்ந்த பிரபல சமையல் கலைஞர்கள் இந்த உணவு வகைகளை தயாரித்தனர்.
What's Your Reaction?

