ஒருவேளை ராமர் இன்று வாழ்ந்தால்… அவரது வீட்டிற்கும் பாஜக அமலாக்கத்துறையை அனுப்பியிருக்கும்…
ராமர் இன்றைய காலகட்டத்தில் வாழ்ந்திருந்தால் பாஜக அவர் வீட்டிற்கும் அமலாக்கத்துறையை அனுப்பியிருக்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் குறித்த விவாதம் இன்று (மார்ச் 9) நடைபெற்றது. அதுதொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் பேசினார். அதில் “இன்று மாநிலத்தின் பட்ஜெட் மீதான விவாதத்தை நடத்தி வருகிறோம். இன்று நமது சகோதரர் மனீஷ் சிசோடியாவை நினைவுகூர விரும்புகிறேன். இது நமது 10வது பட்ஜெட் கூட்டத்தொடர், 9 பட்ஜெட்களை மனீஷ் தான் தாக்கல் செய்தார். 11வது பட்ஜெட் தாக்கலின் போது அவர் நம்முடன் இருப்பார் என நம்புகிறேன்” என்றார்.
அப்போது, மத்திய அமைப்புகள் மூலம் பாஜக அரசு எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் நோக்கில் நடந்துகொள்வது குறித்து விமர்சித்தார். மேலும் அவர், ”இன்றைய கால கட்டத்தில் ராமர் வாழ்ந்திருந்தால், அவர் வீட்டிற்கும் பாஜக அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை அனுப்பி, நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து பாஜகவில் சேர்கிறீர்களா அல்லது சிறை செல்கிறீர்களா எனக் கேட்டிருப்பார்கள்” என்றார்.
What's Your Reaction?