இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என்னிடம் பலமுறை மோசமாக நடந்து கொண்டார்: கும்பமேளா புகழ் மோனாலிசா பரபரப்பு குற்றச்சாட்டு 

மோனாலிசா பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா இயக்கிய ஒரு படத்தில் நடித்தார். இந்நிலையில் சனோஜ் மிஸ்ரா படப்பிடிப்பின் போது பலமுறை தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என்னிடம் பலமுறை மோசமாக நடந்து கொண்டார்: கும்பமேளா புகழ் மோனாலிசா பரபரப்பு குற்றச்சாட்டு 
கும்பமேளா புகழ் மோனாலிசா பரபரப்பு குற்றச்சாட்டு 

பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளா மூலம் புகழ்பெற்றவர் மோனாலிசா. இதன் பிறகு ஏராளமான விளம்பரப் படங்களிலும், பின்னர் சினிமாவிலும் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து பர்மான் கான் என்பவரை இவர் திருமணம் செய்தார். தற்போது இவர் கொச்சியில் கணவருடன் வசித்து வருகிறார்.

உத்தரபிரதேசத்தில் நடந்த கும்பமேளா மூலம் புகழ்பெற்றவர் மோனலிசா. இவர் இந்தி திரைப்பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இயக்கிய திரைப்படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் நடிகை மோனலிசா, நடிகர் பர்மான் கானை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்தநிலையில் நடிகை மோனலிசா கொச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தி திரைப்பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என்னிடம் பல முறை மோசமாக நடந்து கொண்டார். டேராடூன், நேபாளம் போன்ற பகுதிகளில் நடந்த திரைப்பட படப்பிடிப்பின்போது, எனது உடலை தொட்டு பெண்மையை அவமதித்தார். ஆனால், எனது குடும்பத்தினருக்கு பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்ததால், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது உண்மையை மூடி மறைக்க, திரைப்பட இயக்குநர் எனக்கு எதிராக தேவையற்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

டைரக்டர் சனோஜ் மிஸ்ரா படப்பிடிப்புத் தளத்தில் வைத்து பலமுறை என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். எனக்கு 18 வயது ஆவதற்கு முன் இந்த சம்பவம் நடந்தது. இதுகுறித்து அப்போது என்னுடைய குடும்பத்தினரிடம் கூறினேன். ஆனால் முதல் படம் தானே என்று கூறி அந்த விஷயத்தை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. டைரக்டர் சனோஜ் மிஸ்ரா மீது இப்போது புகார் கொடுப்பது குறித்து நான் ஆலோசித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow